Spread the love

மாநாடு 9 April 2022

தஞ்சாவூர் நகர்ப்பகுதியில் பர்மா பஜாரில் உள்ள கடைகள் தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் இந்தப் பகுதியின் கிராம நிர்வாக அதிகாரி மேற்பார்வையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி இப்போது கடைகள் சீல் வைக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் நகரப்பகுதியில் ஏறக்குறைய 1980 ஆம் ஆண்டு வாக்கில் பர்மாவிலிருந்து வந்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தமிழக அரசின் வழிகாட்டுதலில் மாவட்ட நிர்வாகம் பர்மாவில் இருந்து வந்தவர்களுக்கு இங்கு கடைகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள கடைகளுக்கு பர்மா பஜார் என்று பெயர் உருவாயிற்று.காலப்போக்கில் கடைக்காரர்கள் தங்களுக்கு வாங்கிய கடைகளை வேறு சில நபர்களுக்கு உள்வாடகைக்கு விட்டதாகவும், கைமாற்றி விற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

பர்மாவில் இருந்து வந்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக கொடுக்கப்பட்ட கடை என்பதால் வாடகையும் குறைவாகவே இருந்திருக்கிறது. இந்நிலையில் 2012ஆம் ஆண்டு வாக்கில் தமிழ்நாட்டின் எழில்மிகு நகரமாக மேம்படுத்துவதில் தஞ்சாவூர் நகரமும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அதன் காரணமாக பழைய கட்டிடங்களை சீரமைப்பது அரசுக்கு சொந்தமான இடங்களை தனியார்கள் ஆக்கிரமித்து வைத்திருப்பதை மீட்கும் நடவடிக்கையில் அரசுக்கு சேர வேண்டிய நிலுவை வாடகை, வரிகளை, மீட்கும் நடவடிக்கையில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற ஆணையர் சரவணகுமார் தீவிரமாக இறங்கினார்.இவரின் நடவடிக்கைகள் ஆரம்பத்தில் சமூக ஆர்வலர்களால் விமர்சிக்கப்பட்டாலும் எதற்கும் விலை போகாத இவரின் நேர்மையும், எவருக்கும் தலை வணங்காத கடமையுணர்வயும் நடுநிலையாளர்கள் புரிந்து கொண்டதன் காரணமாக இவரைப்போன்ற அதிகாரி கிடைப்பது அரிது என்று அனைவராலும் போற்றும்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு மாநகராட்சியின் சார்பாக முன்னெச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டது. இதை செலுத்துவதற்கு கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்கும் அந்த இடங்கள் அரசுக்கு சொந்தமானது என்று அறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டு நீங்களாகவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதன் பிறகு சிலர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள வரிகள்,வாடகைகள் உட்பட நிலுவையில் இருந்த தொகைகளை செலுத்தி விட்டனர். செலுத்தாதவர்களின் கடைகள் சீல் வைக்கப்படும் என்று தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும் ,மாநகராட்சியும் இணைந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஒலிபெருக்கிகள் மூலம் ஆட்டோவில் நகரை சுற்றி வந்து பர்மா பஜாரில் முன்னெச்சரிக்கை செய்தனர்.

 

அதன்படி ஏறக்குறைய 107 கடைகள் உள்ளது என்று சொல்லப்படும் பட்டததில், பலரும் பல ஆண்டுகளாக மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரி நிலுவை தொகைகளை செலுத்தி விட்டனர் என்றும் அதில் சிலர் பாதி தொகையை செலுத்தி உள்ளதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் என பெரும்படையுடன் வந்திருக்கிறார்கள். இப்போது இந்த பகுதியில் பாதி தொகை செலுத்தியவர்களுக்கு சிறு அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதாக இங்கு இருப்பவர்கள் கூறுகிறார்கள். அதேேசமயம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தொகைகளை முழுவதும் செலுத்தாத கடைகள் 30 என்று கூறப்படுகிறது.அந்த கடைகளை கண்டறிந்து வந்திருந்த அதிகாரிகள் சீல் வைத்தார்கள் இதனால் பர்மா பஜார் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி:க.இராம்குமார்.

29710cookie-checkதஞ்சையில் பரபரப்பு கடைகள் சீல் வைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!