Spread the love

மாநாடு 10 November 2022

இன்று மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் மாநில அளவிலான தமிழ்நாடு நகராட்சி , மாநகராட்சி அலுவலர் சங்க முக்கிய நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கடந்த 20-10-2022 அன்று தமிழக அரசு வெளியிட்ட ஆணை எண்: 152 ஐ ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது ஏனெனில் இந்த அரசாணை மூலம் தற்போது சென்னை மாநகராட்சி தவிர

 மீதமுள்ள 20 மாநகராட்சிகளிலும் புதிதாக பணியிடங்களுக்கு ஆட்களை சேர்க்க இருக்கிறார்கள், இந்த போக்கு நீடித்தால் முழுவதுமே மாநகராட்சி, நகராட்சி பணியிடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும், ஏற்கனவே பல பணியிடங்கள் தனியாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது அவ்வாறு தனியார் நிறுவனங்கள் மூலம் பணியில் இருப்பவர்களால் முழுமையாக மக்களுக்கு சேவையாற்ற முடியவில்லை என்பது கடந்த கால வரலாறு .

உதாரணத்திற்கு 2015 ஆம் ஆண்டு மழை வெள்ளம் ஏற்பட்டபோது, சென்னை தத்தளித்தது ,நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டிருந்தது, அதனை சரி செய்ய வேறு ஊர்களில் இருந்த நகராட்சி , மாநகராட்சியில் நிரந்தர பணியில் இருந்த ஊழியர்களை கொண்டு 1 வாரத்தில் சென்னையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கையாண்டு, நிலையை சரி செய்து இயல்பு நிலைக்கு சென்னையை கொண்டு வந்தார்கள், எதார்த்த நிலை இப்படி இருக்க

தமிழக அரசு நகராட்சி, மாநகராட்சி பணியிடங்களை முழுமையாக தனியாருக்கு தாரை வார்க்கும் விதமாக அரசு ஆணை எண்:152 வெளியிட்டு இருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம் என்றார் மாநில பொதுச் செயலாளர் தாமோதரன்.

மேலும் கூறுகையில் வருகிற 25-11-2022 அன்று நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களின் முன்பு இப்போரிக்கையை வலியுறுத்தி தர்ணா நடைபெறும், அதன் பிறகு 29-11-2022 அன்று சென்னையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரையும், நகராட்சி நிர்வாக துறை செயலாளரையும் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து எங்களது கோரிக்கையை வலியுறுத்துவோம், அதிலும் உடன்பாடு ஏற்படவில்லையெனில் சங்க நிர்வாகிகளும், அனைத்து நிலை பொறுப்பாளர்கள்,

உறுப்பினர்களோடும் கலந்து பேசி அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம் என்றார்.நடைபெற்ற கூட்டத்தில் கா.முருகானந்தம் மாநிலத் தலைவர் ,மு.தாமோதரன் மாநில பொதுச் செயலாளர், இரா.சாமிநாதன் மாநில பொருளாளர், உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தார்கள்,

மாநிலத் துணைத் தலைவர்கள் : முகமது ரஷீத், செந்தில்குமார் செழியன், பாலசுப்ரமணியன் , வெங்கடேசன், மதிவாணன், பஞ்சவர்ணம். உள்ளிட்டவர்களும்,

துணைப் பொதுச் செயலாளர்கள்: குமரவேல் , மகுடேஸ்வரன், பிரதான் பாபு, தியாகராஜன் உள்ளிட்டவர்களும்,

மாநில அமைப்பு செயலாளர்கள்: பொற்செழியன், கோபாலகிருஷ்ணன், மாநில தலைமை நிலைய செயலாளர் தமிழ்மணி,

மாநிலச் செயலாளர்கள் : ஐவன், சுந்தர்ராஜன், சக்திவேல், மணிவண்ணன், எஸ்தர் சோபா, செந்தில்குமார் உள்ளிட்டவர்களும்,

தணிக்கையாளர்கள்: சாகிர் உசேன், ஜீவரத்தினம் உட்பட ஏராளமான நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

வீடியோ லிங்க்: https://youtu.be/ANa2RMqWNbw

56221cookie-checkஅரசு வேலையை தனியாருக்கு தரக்கூடாது போராட்டம் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!