மாநாடு 10 January 2024
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தற்போது அமைந்துள்ள தமிழக அரசிடம் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய பல கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் நேற்றிலிருந்து தொடங்கிய வேலை நிறுத்த போராட்டம் இன்றோடு இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத தொமுச போன்ற ஆளுங்கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்கங்கள் பேருந்துகளை இயக்கி வருகிறார்கள் அது மட்டும் அல்லாமல் தற்காலிக ஊழியர்களை வைத்தும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இதனால் தூத்துக்குடி பணிமனைக்குட்பட்ட பேருந்துகள் நடுவழியிலேயே நின்று பயணிகள் அவதிப்பட்டதையும் செய்தி ஊடகங்கள் வெளியிட்டு வருகிறது.
இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறும் போது நாங்கள் திடீரென இப்பராட்டத்தில் ஈடுபடவில்லை பல ஆண்டுகளாக எங்கள் உழைப்பில் பிடித்தம் செய்த எங்கள் பணத்தை கொடுங்கள் எங்களுக்கு அரசு கடன் பட்ட தொகையை கொடுக்காமல் இருப்பது முறையல்ல என்பது போன்ற நியாயமான எங்களது உரிமையை கேட்டு தான் போராடுகின்றோம் மக்களை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை அதுவும் ஏற்கனவே நாங்கள் இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடிய போது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சி அமைத்த உடன் 100 நாட்களில் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று கூறியதை நம்பி நாங்கள் அனைவரும் சிந்தாமல் சிதறாமல் திமுகவுக்கு வாக்களித்தோம். வாக்குறுதியை மீறி திமுக எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறது என்றார்கள் வேதனையோடு.
இந்நிலையில் பொங்கல் விழா காலம் என்பதால் மக்கள் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்கிற காரணத்தால் தற்காலிகமாக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்க முடிவு எடுத்து அரசு தரப்பில் அந்தந்த மாவட்ட போக்குவரத்து அலுவலகங்களை அணுகி தங்களின் ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தையும், ஆதார் அட்டையையும் காட்டி அரசு பேருந்து இயக்கும் வேளையில் ஈடுபட தகுதி உள்ளவர்கள் வரலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறது தமிழக அரசு.