மாநாடு 3 June 2022
சென்னை வடபெரும்பாக்கம் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான லாரி நிறுத்தி வைக்கும் இடம் உள்ளது. அங்கு வடபெரும்பாக்கம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் ,நவீன், வடகரை பகுதியை சேர்ந்த குமரன் மற்றும் மேலும் சில லாரி ஓட்டுநர்கள் நேற்று முன்தினம் இரவு பேசிக்கொண்டு இருந்ததாகவும், அப்போது மது அருந்திக் கொண்டிருந்த போது வடமாநில ஓட்டுனர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த வடமாநில ஓட்டுனர் ஒருவர் லாரியை வேகமாக எடுத்து இயக்கியதில் கமலக்கண்ணன், நவீன், குமரன் ஆகிய மூவர் மீதும் லாரி ஏறி இருக்கிறது இதில் சம்பவ இடத்திலேயே கமலக்கண்ணன் துடிதுடித்து இறந்து இருக்கிறார், படுகாயமடைந்த நவீன் மற்றும் குமரன் இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள்,
இச்சம்பவம் கேள்விப்பட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அந்த இடத்தில் குவிய தொடங்கி இருக்கிறார்கள், அங்கு நின்றிருந்த வடமாநிலத்தை சேர்ந்த லாரிகளை அடித்து உடைத்து இருக்கிறார்கள் ,இச்செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள், குமரன் மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார்.மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நவின் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்திருக்கிறார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் காவல்துறைனயினர் தப்பியோடிய வடமாநில லாரி ஒட்டுநர்களான கிரிஷ் குமார் கண்ணையா, லால் சிங் இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.