Spread the love

மாநாடு 3 June 2022

திருநெல்வேலி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர் 22 வயதுடைய சக்திவேல் இவர் மதுரவாயில் அருகில் இருக்கும் தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி பழைய பாத்திரங்களை வாங்கி விற்கும் கடை நடத்தி வந்தார். இவருக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நிலையில் இருவரும் மதுரவாயலில் வசித்து வந்தனர்.

இன்று காலை உறவினர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அலைபேசியை கணவன் மனைவி இருவருமே எடுக்கவில்லையாம், வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்காமல் தாழிட்டு இருந்ததாம், இவர் நடத்தி வந்த கடையும் வெகுநேரம் திறக்காமல் இருந்ததால் வீட்டின் கதவை தட்டியிருக்கிறார்கள் அப்போதும் யாரும் வந்து திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், உறவினர்களும் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை தட்டிப் பார்த்திருக்கிறார்கள் கிடைக்கவில்லை என்றவுடன் கதவை உடைத்து இருக்கிறார்கள் உள்ளே சென்று பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்து இருக்கிறார்கள் அதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் இருவரின் பிரேதத்தையும் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள் .மேலும் இவர்களின் தற்கொலைக்கான காரணத்தையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் . அதில் இவர்கள் தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருக்கிறது அதில் சக்திவேல் எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து விட்டதால் இனி எங்களுக்கு குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவே எங்கள் சாவை செய்கிறோம் இதில் யாருக்கும் எந்த சம்மதம் இல்லை என்று எழுதி இருவரும் கையொப்பமிட்ட கடிதத்தைக் காவல்துறையினர் கைப்பற்றி இருக்கின்றார்கள்.

இவர்களின் உடல் ரீதியான பிரச்சனை இவர்களுக்கு மனரீதியாக அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது .இதற்காக மருத்துவர்களை அணுகாமல் இதுபோன்ற தற்கொலை முடிவை இவர்கள் எடுத்திருக்கிறார்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

தற்கொலை என்பது எதற்குமே தீர்வாகாது சாவதற்காக துணிந்து முடிவெடுத்து இருவரும் கைகோர்த்து சாவை தீர்மானித்தவர்கள், இருவரும் சேர்ந்து இவருக்கு அவர் குழந்தையாய் அவருக்கு இவர் குழந்தையாய் கூடி வாழ்ந்திருக்கலாம், சாவதற்காக பேசி முடிவெடுத்தவர்கள் வாழ்வதற்காக பேசியிருக்கலாம்,

யாருக்கேனும் ஏதேனும் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை எண்ணம் தோன்றினால் அதனை தவிர்க்க அவர்களுக்காக இலவசமாக தக்க ஆலோசனை தர தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசும் தயாராக இருக்கிறது.

அவர்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்:

தமிழக அரசு இலவச மருத்துவ ஆலோசனை சேவைக்கு 104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மனிதா சாவு சாவை தீர்மானிக்கும் மண்ணில் வாழ்வை நாம் தீர்மானிப்போம்.

37630cookie-checkஅந்த காரணத்திற்காக இந்த முடிவை எடுத்த இளம் தம்பதி அதிர்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!