மாநாடு 18 March 2022
தமிழ்நாட்டில் லஞ்ச ஊழலற்ற ஆட்சி நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தலின்போது தெரிவித்திருந்தார்.அதன்படி முதல்வர் ஸ்டாலின் அவர்களும் லஞ்சத்தை ஒழிப்பதற்காக பஞ்சாப் முதல்வரைப் போல திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே நிதர்சனம்.
மேலும் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக போட்டியிட்டு பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றி ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் பகவந்த் மான் லஞ்ச ஊழலை ஒழிக்க இந்த வழியை பயன்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.
அதில் குறிப்பிட்டு இருப்பதாவது: பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அந்த மாநிலத்தின் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், அவர் ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பகத்சிங்கின் தியாகி தினத்தன்று ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான ஹெல்ப்லைன் ஒன்று தொடங்கப்படும் அதில் எனக்கு தனிப்பட்ட வாட்ஸ்அப் எண் இணைக்கப்படும் யாராவது லஞ்சம் கேட்டால் அவர்களின் ஆடியோ அல்லது வீடியோவை பதிவு செய்து அதற்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் பஞ்சாபில் ஊழலுக்கு இடமில்லை எனவும் தெரிவித்தார். நேர்மையான அதிகாரிகளுக்கு நான் எப்பொழுதும் துணை நிற்பேன் என பதிவிட்ட அவர் இனி யாரிடம் இருந்தும் பணம் பறிக்கமாட்டாது என தெரிவித்தார்.