Spread the love

மாநாடு 18 April 2022

திருப்பூரில் செய்யாத குற்றத்திற்காக காவல்துறையினர் தொடர்ந்து தன் மீது வழக்கு பதிவு செய்வதாக குற்றம் சாட்டி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் பிரகாஷ் என்பவர் திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் திருப்பூரில் தங்கி இருக்கும் இவர் மீது, நண்பரின் வீட்டில் இருந்து சிலிண்டர் திருடி விட்டதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் வெவ்வேறு காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருப்பதாகவும், நான்கு மாதம் கோவை மத்திய சிறையில் விசாரனை கைதியாக இருந்து வந்துள்ளதாகவும், 6 வழக்குகளிலும் தான் சம்பந்தப்படாத நிலையில் தொடர்ந்து தன் மீது வழக்குகள் பதிவு செய்ய காவல்துறை முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் செய்யாத தவறுக்கு தன் மீது வழக்கு பதிவு செய்வதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி மற்றும் மகளுடன் தீக்குளிக்க முயற்சித்தார். மூன்று பேரும் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்ட நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

31380cookie-checkதிருவாரூர் காரர் தீக்குளிக்க முயற்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

Leave a Reply

error: Content is protected !!