மாநாடு 12 March 2022
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்து தஞ்சாவூர் மாநகராட்சியின் 3வது வார்டு மாமன்ற உறுப்பினராக மதிமுகவின் சார்பில் சுகந்தி துரைசிங்கம் வெற்றி பெற்றார்.
பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள் எப்படியாவது ஏதாவது ஒரு வகையில் நமது சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வருவார்கள்.ஆனால் பல நபர்கள் வந்த நோக்கம் மறந்து விடுவதை நாம் பார்த்திருப்போம். சுகந்தி துரைசிங்கம் போன்ற சில சமூக நல விரும்பிகளை அவர்கள் செய்யும் நல்லவற்றை தட்டிக் கொடுத்து பாராட்ட வேண்டும்,அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.அந்த நோக்கத்தில்தான் இந்த செய்தியை மாநாடு இதழ் செய்கிறது.
கருந்தட்டங்குடிக்கும், பள்ளி அக்ரஹாரத்திற்கும் நடு பகுதியில் கிருஷ்ணன்கோவில் உள்ளது.கும்பகோணம், அரியலூர், சென்னை ,போன்ற முக்கிய போக்குவரத்துக்கள் செல்லும் பகுதி அதுமட்டுமல்லாமல் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் ,பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் செல்லும் மாணவர்கள் இந்தப் பகுதியை கடந்து தான் தினந்தோறும் நகரத்திற்கு வரவேண்டும். இவ்வாறான முக்கிய பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பாதாள சாக்கடை பழுதாகி அடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறி சாலை முழுவதும் ஓடிக்கொண்டிருந்தது.
இதனால் நோய் பரவும் சூழல் இருந்தது. இந்தப் பகுதியை இன்று காலை மதிமுகவின் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் மாநகரச் செயலாளர் துரைசிங்கம் அவர்களும் மாநகராட்சி பொறியாளர் மகேந்திரன் மேற்பார்வையில், 3வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுகந்தி துரைசிங்கம் வேண்டுதலுக்கு இணங்கி மாநகராட்சி ஊழியர்களை வைத்து பழுது நீக்கினார்கள்.
இந்த செயல் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது இவ்வாறான செயலை யார் செய்தாலும் பாராட்டக் கூடிய நமது மாநாடு இதழ் இவர்களையும் மனதார பாராட்டி வாழ்த்துகிறது