மாநாடு 17 March 2022
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் புரிய வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் உடனடியாக போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த 22 நாட்களாக உக்ரேனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீப்பகுதியை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயற்சி செய்துவருவதாக காணப்படுகிறது. பொது மக்களின் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருவதால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
தங்கள் நாட்டில் ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய உக்ரைன் உடனடியாக நிறுத்த உத்தரவிடக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதில் போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இது உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார். சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இதற்கான அமைதி ஒப்பந்தம் தற்போது தயாராகி வருகிறது. போர் நிறுத்தம் மற்றும் படைகளை திரும்ப பெறுதல் ஆகியவை இதில் முக்கிய அம்சங்களாக இடம்பெற உள்ளன. நேடோ வில்இணையும் திட்டமில்லை என்று உக்ரைன் அரசு தெளிவுபடுத்தியது.
ரஷ்யாவின் சில நிபந்தனைகளை ஏற்க முன் வந்திருப்பதால் சமரச முயற்சிக்கு வாய்ப்புள்ளதாக காணப்படுகிறது. காணொளி வாயிலாக பேச்சுவார்த்தைகளின் மூலம் முன்னேற்றம் என்றும் கூறப்படுகிறது