Spread the love

கிரிப்டோகரன்சி முதலீடுகள்

கடந்த சில வாரங்களாகவே கிரிப்டோகரன்சி சந்தை அதிக அளவிலான ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகின்றது. ஏனெனில் கிரிப்டோ முதலீட்டாளர்கள் ஆபத்தான நிலையில் உள்ள முதன்மைக்காயின்களில் இருந்து தங்களின் கிரிப்டோக்களை எடுத்து அவற்றை நிலையானது என கருதும் காயின்களில் முதலீடு செய்து வருகின்றார்கள்.

இவ்வாறு செய்வதால் அதிகப்படியான நஷ்டங்களை தவிர்த்து, முதலீட்டளர்களின் பணத்தை சீராக வைக்க முடியும் என நம்புகின்றார்கள்.

பிட்காயின் , எதிரியம், பைனான்ஸ் மற்றும் சொலானோ போன்ற முதன்மைக்காயின்களின் அதிகப்படியான விலையும் அதன் விலை வீழ்ச்சியும் முதலீட்டாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.அதனால் பெரும்பாலனா கிரிப்டோ முதலீட்டாளர்கள் அவர்களின் முதலீடுகளை சரியாக முதலீடு செய்து தங்களின் முதலீடுகளை பாதுகாக்க நினைக்கிறார்களாம். ஆகவே நிலையான விலைக் குறைவான ஆல்ட்காயின்கள் பக்கம் தங்களின் கவனத்தை திருப்பியுள்ளார்கள்.

இந்திய கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் நீண்டகால அடிப்படையில் அதிக இலாபம் தரும் முதலீடுகளை விரும்புகின்றார்கள். அதனால் பிட்காயின் மற்றும் எதிரியம் போன்ற காயின்களில் முதலீடு செய்வதைத் தவிர்த்து தற்போதுள்ள விலைச்சரிவை பயன்படுத்தி விலைக்குறைவான நிலையானதாக கருதும் டெதர் மற்றும் யூஎஸ்டி போன்ற அமெரிக்க டாலர் மதிப்பைக்கொண்ட காயின்களில் அதிகம் முதலீடு செய்துள்ளார்கள். இதனால் கடந்த இரண்டு வாரங்களில் நிலையானதாக கருதும் காயின்களின் முதலீடு 15 விழுக்காடு உயர்ந்துள்ளது எனவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

11570cookie-checkஇதனால் கிரிப்டோ முதலீடுகள் 15 விழுக்காடு உயர்ந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!