டெல்லி பயணம் கடைசி நேரத்தில் திடீர் ரத்து
தமிழ்நாடு ஆளுநரின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எடுப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்டினார்.இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் அதிமுக கலந்து கொள்ளவில்லை இந்த கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.இதனால், நாளை சிறப்பு சட்டப்பேரவை நடைபெறுகிறது. இதற்கிடையில் ஆளுநர் மூன்று நாள் பயணமாக டெல்லி இன்று செல்ல திட்டமிட்டு இருந்ததாக செய்தி வெளியானது.
இந்த பயணத்தின்போது நீட் தேர்வு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ஆளுநரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நாளை மீண்டும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.