மாநாடு 7 March 2022
தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற திமுக அரசு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு ஆவின் பால் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானங்களை விலையேற்றம் செய்துள்ளது. இதை விமர்சிக்கும் விதமாக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட் செய்துள்ளார்.
தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை கடந்த 4ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது. நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவித்தது.
அதன்படி, 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515ல் இருந்து ரூ.535 ஆக உயர்ந்துள்ளது. அரை லிட்டர் தயிர் ரூ.27ல் லிருந்து ரூ.30 ஆகவும், குல்பி ரூ.25ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80ல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு பால் முகவர்கள் சங்கம், அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியதற்கு பலரும் கண்டங்கள் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்களின் விலையை உயர்த்தி, இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் ஆவினின் தயிர், நெய் ஆகியவற்றின் விலை உயர்ந்துவிட்டது. பீர் முதல் குவாட்டர் வரை விலை உயர்ந்துவிட்டது. உறுதியளித்தபடியே இறுதியாக தமிழகத்தில் விடியல் ஆட்சி விடியல் ஆட்சி தொடங்கி விட்டது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.