மாநாடு 15 February 2022
தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கட்சியினர் அனைவரையும் சந்தித்து வருகின்ற இந்நிலையில்
நேற்றைய தினத்திலிருந்து திமுகவும், அதிமுகவும் அதிரடியாக கட்சி உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்கம் செய்யும் வேலையில் இறங்கியுள்ளார்கள்.அதன்படி நேற்று ஐம்பத்தி ஆறு பேரை திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி இருந்த நிலையில்,
இன்றும் 50க்கும் மேற்பட்டோரை கட்சியிலிருந்து நீக்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.அதன்படி திமுகவிலிருந்து மேலும் 52 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திமுகவினர் 52 பேரை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கி பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களில் கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் 52 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, கராத்தே சக்திவேல் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். திமுக பிரதிநிதிகள் வெங்கடேசன், கார்த்திக், உஷா நந்தினி, திருமூர்த்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை வடக்கு மாவட்டத்தில் முத்துமாரி, முத்துப்பிள்ளை, கீர்த்திவாசன், வசந்தி சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சக்திவேல், கோட்டை அம்மாள், ஜெயராமன், பாக்கியலட்சுமி, ஆனந்த் ஆகியோரும் கட்சியின் நீக்கப்பட்டுள்ளனர்.
லட்சுமணன், குமாரராஜா, வெங்கடேசன், சிங்காரவேலு, சண்முகநாதன், சாமிநாதன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் முத்து, உமா மகேஸ்வரி மீனா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்