காபபாற்றுவாரா ஸ்டாலின்
திமுகவில் முன்பெல்லாம் கோஷ்டி என்பது வெளிப்படையாகவே இருந்து வந்தது ஒரு பக்கம் நாங்கள் அஞ்சாநெஞ்சன் அண்ணன் அழகிரி பாசறை என்று ஒரு குழுவினரும் இன்னொரு பக்கம் நாங்கள் தளபதியின் ஆதரவாளர்கள் என்று ஒரு குழுவினரும் நாங்கள் கனிமொழி ஆதரவாளர்கள் என்றும் ஆளாளுக்கு ஒரு குழுவாக செயல்பட்டு வந்தார்கள் இந்த கோஷ்டி சண்டையில் அப்பாவி திமுகவினர் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நின்றார்கள் இதனால் பல உயிர்கள் கூட பலியானதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
தென்னகத்தில் திமுகவின் காவல் அரனாக திகழ்ந்த த.கிருஷ்ணன் நடைபயிற்சில் ஈடுப்பட்டு இருந்த போது வெட்டி படுக்கொலை செய்யப்பட்டது , மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகத்தை தீ வைத்து கொளுத்தியதில் பலியானவர்களின் குடும்பங்கள் அநாதையாக நின்றது இப்படி ஏராளம் நடந்ததை அன்றைய தினத்தில் ஊடகங்கள் வாயிலாக அனைவரும் அறிந்தது தான் என்றாலும் கூட
அன்று உயிரோடு இருந்த திமுகவின் தலைவர் கருணாநிதி அவர்கள் எத்தனை கோஷ்டிகள் இருந்தாலும் அத்தனை கோஷ்டிகளும் திமுகவிற்கு தானே வாக்களிக்க போகிறார்கள் என்று சில சமயங்களில் அழைத்து கடுமையாகவும் சில நேரங்களில் மென்மையாகவும் கண்டித்து அரவனைத்து கட்சியை கட்டி காத்து வந்தார்.
அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவதற்கு முன்பே கட்சியின் தலைவர் யார் என்பதை திமுகவின் தொண்டர்களுக்கு அடையாளம் காண்பித்து இனி ஸ்டாலின் தலைமையில் தான் திமுக செயல்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார். அப்போதே அழகிரி தன் தாயை சந்திப்பது ,நடிகர் ரஜினியை சந்திப்பது இனி என் தலைமையில் தான் திமுக செயல்படும் என்று கூறி வந்ததும், அழகிரியின் ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் கூட்டம் போட்டதும் பஞ்ச் வசனங்கள் தாங்கிய போஸ்டர்கள் ஒட்டியதும் ஊர்வலம் நடத்தியதும் எல்லாருக்கும் தெரியும்
இதெல்லாம் முடிந்து ஸ்டாலின் தலைமையில் அணிவகுத்து தேர்தலிலும் திமுக வெற்றி பெற்ற பிறகு தான் இந்த கோஷ்டி யுத்தம் முடிந்தது அதுவும் முழுவதும் முடியவில்லையாம் அங்கு சின்னவர், பெரியவர் என்று தனித்தனியாக உதயநிதி ஸ்டாலின் அவர்களை அழைக்க வேண்டும் என்று ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் செய்தி கசிய ஆரம்பித்தது.
அடிமட்ட திமுகவின் தொண்டர்கள் எப்படியோ நம்ம ஊரில் உள்ள கோஷ்டியில் இருக்கலாம் மேலிடத்து கோஷ்டி பூசலில் சிக்கி தவிப்பதற்கு இதுவே மேல் என்றிருந்தார்களாம். ஏற்கனவே அடிப்பட்டு கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்து காத்து வந்தது நாங்க தம்பி ஆனால் திமுகவை அழிக்க துடித்தவர்களுக்கு அமைச்சர் பதவி தந்து அழகு பார்க்கிறார் எங்கள் தளபதி ஸ்டாலின் என்னத்த சொல்றது உள்ளூர்களில் கூட அதிமுகவில் இருந்து வந்து திமுகவில் இப்ப இணைந்தவர்களுக்கு பதவிகள் தரப்படுது எதுவும் சொல்லக்கூடாது தலைவர் மாதிரி கிடையாது தளபதி என்று சொல்லி என் பெயரை போட்டுகீட்டு புடாதிங்க என கூறி நம்மிடமிருந்து நகர்ந்தார் அந்த திமுகவின் தொண்டர்.
செய்தி இப்படி இருக்க தஞ்சையில் மேரீஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் பக்கத்தில் அடுத்தடுத்து ஒட்டி இருந்த திமுகவின் போஸ்டர் தான் இப்போது பரப்பரப்பாகி இருக்கிறது திமுகவில்
ஒரு போஸ்டர் 22-1-2022 நாளைக்கு திருமணத்திற்கு வருகை தரும் நடிகரும் திமுகவின் தலைவர் கருணாநிதி பேரனுமாகிய அருள்நிதியை வரவேற்க அடித்து ஒட்டிய போஸ்டரில் கலைஞர் படம் மட்டுமே இருக்கிறது முதல்வர் ஸ்டாலின் படமோ, உதயநிதி ஸ்டாலின் படமோ எதுவும் இல்லை.
அடுத்த போஸ்டர் தஞ்சை நகர திமுக சார்பில் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அடங்கியது. எப்படியோ கோஷ்டிகள் பிரச்னை எழாமல் இருந்தால் சரிதான் ஏற்கனவே கொடிய நோய் கட்டுப்பாட்டில் மக்கள் தவிக்கும் நிலையில் கட்சியின் கோஷ்டி பூசலில் மக்களை தவிக்கவிடாமல் காப்பாரா தளபதி ஸ்டாலின் ?
மணமக்களை நாமும் வாழ்த்துவோம் மணமக்கள் வாழ்க வளமுடன்!