Spread the love

மாநாடு 20 February 2023

முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா 1941 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிராமத்தில் மீரா, பாத்திமா தம்பதிக்கு மகனாக, எளிய குடும்பத்தில் பிறந்தவர். தனது 81வது வயதில் நேற்று 19ஆம் தேதி பிப்ரவரி மாதம் 2023 ஆம் ஆண்டு தஞ்சையில் இயற்கை எய்தினார். இவரின் மறைவு எழுத்துலக ஆளுமைகளுக்கும், எப்படியாவது தமிழைக் காக்க வேண்டும், எழுத்துலகில் ஏற்றம் பெற வேண்டும் என்று துடிக்கின்ற இளைய படைப்பாளர்களுக்கும், பேரிழப்பாக அமைந்திருக்கிறது ஏனெனில் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவராக இருந்தாலும் கூட

படைப்பாளர்களின் படைப்புகளுக்கும், எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கும், மிகவும் மதிப்பு கொடுக்கக்கூடிய மாமனிதர். கட்சிக் கடந்து, அமைப்புகள் கடந்து பலராலும் நேசிக்கப்படுபவர், எழுதிய ஆள் யார் என்பதை விட , எழுத்தில் என்ன பொருள் இருக்கிறது என்று ஆழ்ந்து, படித்து உணர்ந்து எழுத்தில் உள்ள கருத்துக்களை நேசித்து பாராட்டக்கூடிய ஆகச் சிறந்த படிப்பாளர், படைப்பாளர், இவரை இழந்து நெஞ்சம் பதப்பதைக்க , தஞ்சையில் தவிக்கின்ற உறவுகளுக்கும் ,அவரின் ஆதரவாளர்களுக்கும் , மாநாடு செய்தி குழுமம்

ஆழ்ந்த இரங்கலையும், சி.நா.மீ. உபயதுல்லா அவர்களுக்கு புகழ் வணக்கத்தையும் கனத்த இதயத்தோடு தெரிவிக்கிறது.

இவரின் மறைவு செய்தி கேட்டவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.

இவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சாவூர் மாநகர தந்தை சண்.ராமநாதன், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் வந்திருந்தார்கள்.

முன்னாள் அமைச்சர், தஞ்சாவூர் கலை இலக்கிய முன்னோடி சி.நா.மீ. உபயதுல்லா மறைவிற்கு இலக்கிய அமைப்புகள் சார்பில் இரங்கல் பேரணியும் நடைபெற்றது, ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தங்களது இறுதி இதய அஞ்சலியை சி.நா.மீ.உபயதுல்லாவிற்கு செலுத்தினார்கள்.

கலை இலக்கிய அமைப்புகள் சார்பில் கொடுக்கப்பட்டிருக்கிற செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:  சுய மரியாதை கொள்கைகளால் திராவிட இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் அன்பை ஒருங்கே பெற்றவர், தஞ்சாவூர் திமுக நகரச் செயலாளராக ஏறக்குறைய 25 ஆண்டு காலம் கழக பணியாற்றியவர், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், ஒரு முறை தமிழ்நாடு அமைச்சரவையின் வணிகவரித்துறை அமைச்சர் என பல்வேறு பெருமைகளை பெற்றவர்.

தஞ்சையில் தமிழ் இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைத்து வழிநடத்தியவர், குறிப்பாக உலகத் திருக்குறள் பேரவை, முற்றமிழ் சுவைஞர் முற்றம், தமிழிசை மன்றம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஆலோசனைகள் வழங்கி புரவலராக இருந்து வழி நடத்தியவர், தஞ்சையில் நடைபெறுகின்ற அனைத்து இலக்கிய கூட்டங்கள் , கல்வி கருத்தரங்கங்களில் பங்கெடுத்து தமது கருத்துக்களை பதிவிட்டவர் , ஆர்வமுள்ள அனைத்து அமைப்புகளையும் ஊக்குவித்தவர்,. மூத்த அரசியல் தலைவர், இலக்கிய முன்னோடி, அனைத்து கட்சி, அமைப்பு மற்றும் இயக்கங்களின் அன்பை பெற்றவர், தனது இறுதி நாள் வரை கொள்கை பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த கலை இலக்கிய முன்னோடி, முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் அவர்களுக்கு தஞ்சையில் அனைத்து கலை இலக்கிய அமைப்புகளின் சார்பில் இரங்கல் பேரணி இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் பகுதியில் இரங்கல் பேரணி புறப்பட்டு அன்னாரின் வீடு வரை சென்று மலர் வளையம் வைத்து அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இரங்கல் பேரணிக்கு வெற்றி தமிழர் பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் இரா. செழியன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ஆசிப் அலி, முனைவர் இளமுருகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி தமிழர் பேரவையின் நிர்வாகிகள் கவிஞர் இனியன், புலவர் சிவனேசன், ராகவ் மகேஷ், மணிபாலா, தமிழ்நாடு தமிழ் சங்க மாநில செயலாளர் ரவி ராஜ், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பூவை சாரதி,. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் ஐயாறு. புகழேந்தி, கவிஞர் வல்லம் தாஜ்பால்,. திராவிட இயக்க தமிழர் பேரவை புலவர் செல்ல கலைவாணன், கவிஞர் ரங்கசாமி, திருவையாறு பாரதி இயக்கம் குணாரஞ்சன், உரத்த சிந்தனை ராஜவேலு, மூத்த குடிமக்கள் பேரவை ஆதி. நெடுஞ்செழியன், இயக்குனர் சசி. எம். குமார், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை முன்னாள் இயக்குனர் இரா. குணசேகரன், ந.மு.வேங்கடசாமி நாட்டார் தாளாளர் வி.விடுதலை வேந்தன், தஞ்சை எழுத்தாளர் களஞ்சியம், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன்,மாவட்ட செயலாளர் தேவா, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில நிர்வாகி எழுத்தாளர் களப்பிரான், உலகத் திருக்குறள் பேரவையின் மாநில செயலாளர் இராம. சந்திரசேகர், மனித நேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் அகமது கபீர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஜி.கிருஷ்ணன், என்.பாலசுப்பிர மணியன், ஆர்.பிரபாகரன்,வெ‌.சேவையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் என்.சீனிவாசன், எம் .வடிவேலன்,. பி.செந்தில்குமார், என். குருசாமி,. திராவிடர் கழக மாநகர செயலாளர் அய்யனார், மதிமுக மாவட்ட செயலாளர் வி.தமிழ்ச்செல்வன், மாநகர செயலாளர் கோ.துரை சிங்கம், பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் வி.பாரி ,சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் இரங்கல் பேரணியில் கலந்து கொண்டனர். 

66110cookie-checkமு.அமைச்சர் உபயதுல்லா யார்? என்ன செய்தார்? புகழ் வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!