Spread the love

மாநாடு 10 February 2022

கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய பெண்கள் அவர்கள் மத நம்பிக்கையில் அணிந்து கல்விக்கூடங்களுக்கு வரும் உடை சம்பந்தமாக அந்த மாநில அரசு பிறப்பித்த உத்தரவு அதனைத்தொடர்ந்து அங்கு ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்வுகள்,சமூக வலைத்தளங்களிலும் அமைதியாக இருக்கின்ற மக்களின் மனங்களிலும் ஒருவித கவலையை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக பல இடங்களிலிருந்தும் சமூக ஆர்வலர்கள் கட்சித்தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் இன்று தேமுதிகவின் சார்பில் ஒரு அறிக்கை வெளியாகியிருக்கிறது.

அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கல்வி கற்கும் இடத்தில் மதத்தை புகுத்துவது தீவிரவாதத்தை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில், ஹிஜாப் அணிந்து சென்ற சம்பவத்தால் அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது. கல்வி கற்கும் இடத்தில் அனைவரும் சமம் என்ற உணர்வு வரவேண்டும் என்பதற்காகத்தான் மாணவர்களுக்கு சீருடை என்ற திட்டமே கொண்டு வரப்பட்டது.

கல்விக்கும் மதத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கல்வி கற்கும் இடத்தில் மதத்தைக்கொண்டு வந்து புகுத்துவது மிகவும் அபாயகரமான விஷயம். தீவிரவாதத்தை விட மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும்.

இதனை வளர விட்டால் தவறான ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதால், இதனை இரும்புக்கரம் கொண்டு உடனே அடக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

16640cookie-checkமதத்தை புகுத்துவது தீவிரவாதத்தை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தேமுதிக அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!