மாநாடு 13 February 2022
திருப்பூர் மாவட்டத்தில், மாநகராட்சி, 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகளில் 420 வார்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மொத்தம் 1,299 வாக்குச்சாவடிகளில், வாக்களிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. 15-ந்தேதி மாலைக்குள், ஓட்டுப்பதிவு எந்திரங்களை தயார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் 6,000 தேர்தல் பணியாளர்கள், 1, 500-க்கும் அதிகமான போலீசார் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வசதியாக பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்டறிய உத்தரவிடப்பட்டது. அதன்படி மாவட்ட அளவில் 224 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன. மாநகராட்சியில் 131 வாக்குச்சாவடிகளும், நகராட்சிகளில் 38 சாவடிகளும், பேரூராட்சிகளில் 55 வாக்குச்சாவடிகளும் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது
175400cookie-checkபதற்றமான 224 வாக்குச்சாவடிகள் கண்டுபிடிப்பு