மாநாடு 22 February 2022
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பணி தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி 218 பேர் தேர்வு பெற்றிருந்ததாக மாநில தேர்தல் ஆணையம் அழைததுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என மொத்தம் 12,602 இடங்களுக்கு வாக்குப்பதிவு 19ந்தேதி நடைபெற்று முடிவடைந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மாநிலம் முழுவதும 268 மையங்களில் இன்று காலை 8மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.அதன்பின்னர், வேட்பாளர்கள்,முகவர்கள் முன்னிலையில் சீல் பிரிக்கப்பட்டு மின்னணு வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், நகர்ப்புற தேர்தலில் 218 இடங்களில் வேட்பாளர்கள் சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் 4 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் 18 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 196 பேரும் என மொத்த்ம் 218 உறுப்பினர்கள் போட்டியின்று தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.