Spread the love

சீமான் அவர்களின் முதற்கட்ட பரப்புரை பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். முதற்கட்ட பரப்புரைப் பயணத்திட்டம் குறித்த விவரம் பின்வருமாறு;

06.02.2022
மாலை 5 மணிக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட வேட்பாளர்அறிமுகக்கூட்டமும் அதனை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பும் எஸ்.எஸ்.திருமண மண்டபம்
ஒத்தக்கடை மேலூர் சாலை
மதுரை யானைமலை பகுதியில் நடைபெறும்.

07.02.2022
மாலை 3 மணிக்கு இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பும் அம்பேத்கர் சிலை அருகில் சிவகங்கையில் அமைந்துள்ள ராயல் மஹாலில் நடைபெறும். வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

15450cookie-checkசீமான் முதற்கட்ட பரப்புரைப் பயணத்திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!