Spread the love

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தற்போதைய செய்தி :

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்ததிலுருந்தே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலையில் தீவிரமாக இறங்கி இருக்கிறது .
திமுக அதிமுக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது இன்றிலிருந்து வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனடிப்படையில் தஞ்சையில் உள்ள அந்தந்த கட்சிகளின் பொறுப்பாளர்களிடமிருந்து. தற்போதைய செய்தியாக நமது மாநாடு இதழுக்கு தெரிய வந்திருப்பது என்னவென்றால்

தஞ்சையின் திமுக கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தவுடன் வருகிற திங்கட்கிழமை எந்தெந்த கூட்டணி கட்சிக்கு எந்தெந்த பகுதிகளை ஒதுக்குவது எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்ற முழு விவரங்களையும் வருகிற திங்கட்கிழமை பெரும்பாலும் உறுதி செய்து அறிவிப்பதாக கூறியிருக்கிறார்கள்.

அதிமுகவும் தனது கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தவுடன் வருகிற திங்கட்கிழமை இறுதி செய்து வேட்பாளர்களையும் கூட்டணி கட்சிகளுக்கான இடங்களையும் அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.

மதிமுகவின் மாவட்ட செயலாளர் திரு வி.தமிழ்ச்செல்வன் பேசியபோது அவர்கள் திமுக கூட்டணியில் ஐந்து இடங்கள் கேட்பதாகவும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் வருகிற திங்கட்கிழமை எத்தனை இடங்கள் எந்தெந்த இடங்கள் என்பது இறுதி செய்யப்படும் என்று கூறினார்.

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் இரா.விஜய் சரவணன் கூறியதாவது: தஞ்சையிலுள்ள மாநகராட்சி ஐம்பத்தொரு வார்டுகளிலும் நிற்பதற்கு தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் எங்களிடம் ஆட்களும் இருக்கிறார்கள் ஆனால் நாங்கள் அனைத்து இடங்களிலும் நிற்பதாக இல்லை ஏனென்றால் மாநில நிர்வாகம் மாவட்ட செயலாளர்கள் ஆகிய எங்களை நம்பி மக்கள் பணி செய்யுங்கள் என்று கூறியிருக்கிறது அதனை நாங்கள் திறம்பட செய்ய வேண்டும் எனவே தான் உறுதியாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் வெல்லும் என்கிற இடங்களை தேர்ந்தெடுத்து நாங்கள் மக்களுக்காக எந்தெந்த பணிகளை செய்திருக்கிறோம் என்பதை  முன் வைத்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளோம்.அதனடிப்படையில் தஞ்சாவூர் மாநகராட்சியில் 10 இடங்களில் சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து சரியான இடங்களில் நிற்பது என்று முடிவெடுத்துள்ளோம் அதேபோல பட்டுக்கோட்டை நகராட்சி அதிராம்பட்டினம் நகராட்சி ஆகிய பகுதிகளில் தலா 5 இடங்களிலும் பேரூராட்சிகளில் வெற்றி வாய்ப்பு உள்ள நபர்களை வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ள இடங்களில் தலா ஐந்து இடங்களில் நிறுத்துவது என்று முடிவெடுத்துள்ளோம்.
எங்களது மாநிலத்தலைமை வெளிப்படையாகவே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியையும் விஜய் அவர்களின் படத்தையும் இந்த தேர்தலில் பயன்படுத்திக்கொள்ள எங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.இது விஜய் ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் விஜய் எங்கள் மேல் வைத்திருக்கும் பெரும் நம்பிக்கையை காட்டுகிறது மேலும் அவ்வப்போது நாங்கள் தேர்தலுக்கான எந்தெந்த நிகழ்வுகளை செய்கிறோம் என்று மாநாடு இதழுக்கு பெரியபடுத்துவதாக மாவட்ட தலைவர் விஜய் சரவணன் அவர்கள் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் அன்பரசன் நம்மிடம் கூறியதாவது தஞ்சாவூரில் உள்ள அனைத்து இடங்களிலும் அதாவது 51வார்டுகளிலும் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துகிறோம் அதனடிப்படையில் இப்போது வரை 31 இடங்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டோம் மீதமுள்ள 20 இடங்களுக்கும் வருகிற திங்கட்கிழமை வேட்பாளர்களை தேர்வு செய்து விடுவோம் என்றார்.

மக்கள் நீதி மையத்தின் பொறுப்பாளர் முருகேசன் கூறியதாவது :

இன்று மாலை இந்த தேர்தலை எப்படி சந்திப்பது எந்தெந்த பகுதிகளில் யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக கலந்தாய்வு செய்வதற்காக கூட உள்ளோம் அதன்பிறகு எந்த பகுதியில் யார் யார் நிற்க்கிறார்கள் என்கிற முழுவிவரத்தையும் திங்கட்கிழமை இறுதி செய்து விடுவோம் குறிப்பாக 1வது வார்டிலும் 51வது வார்டிலும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது இதன் பிறகு வேறு எங்கெங்கு நிற்போம் என்பதை தெரியப்படுத்துகின்றோம் என்றார்.

எஸ்டிபிஐ கட்சி தஞ்சையில் எந்தெந்த இடங்களில் யார் யாரை நிறுத்துவது என்பதை இன்று மாலை கலந்தாய்வு செய்தவுடன் அறிவிப்பதாக அந்த கட்சியின் பொறுப்பாளர் சபி அவர்கள் நம்மிடம் கூறினார்.

அமமுக மாவட்டச் செயலாளர் ராஜேஸ்வர் கூறியதாவது தஞ்சாவூரில் உள்ள 51 வார்டுகளிலும் பேரூராட்சிகளிலும் அனைத்து இடங்களிலும் 100 விழுக்காடு நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துகிறோம் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என்று தெரிவித்தார்.

11610cookie-checkநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிகளின் வியூகங்களும் நிற்கும் இடங்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!