மாநாடு 26 மே 2023
தமிழ்நாட்டிலேயே சிறந்த மாநகராட்சி தஞ்சாவூர் மாநகராட்சி என்றும் நம்பர் ஒன் மாநகராட்சி என்றும் தம்பட்டம் அடிக்கப்படுவதை தஞ்சாவூரில் திண்டாட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்ற போதிலும்
தஞ்சாவூரில் பல சாலைகள் பள்ளமும் மேடுமாக இருப்பதை சாதாரண நாட்களிலேயே சென்று ஆய்வு செய்து அந்தந்த துறை அதிகாரிகளிடம் பேசி அதை சரி செய்து மக்களுக்கு உண்மையிலேயே தொண்டாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் அதனை அப்போது சரி செய்யாமல் கொண்டாட்டத்தில் பாட்டு பாடி கொண்டு இந்த வேலைகளில் ஈடுபடாமல் இருந்ததல் இன்று
ப
பெய்த மழையில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகிலேயே சாலையில் குளம் போல தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் திண்டாடி போகின்ற நிலைமை ஆகி இருக்கிறது.
சாதாரணமாகவே தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள சாலைகள் பள்ளமும் மேடுமாக இருப்பதால் அந்த பள்ளங்களில் எல்லாம் தற்போது தண்ணீர் நிரம்பி நிற்கக்கூடிய நிலை உள்ளது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நடந்து பணி முடித்து வீட்டுக்கு செல்பவர்கள்
அந்த பள்ளங்களில் சிக்கி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதனை உடனடியாக களையும் விதத்தில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலைக்கு அருகில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கிற நீரையாவது உடனடியாக அகற்ற வேண்டும் , இனி எப்போதும் தண்ணீர் அங்கு தேங்காத விதத்தில் சரி செய்ய வேண்டும் என்றும் தஞ்சாவூரில் உள்ள அனைத்து சாலைகளையும் போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தார்கள்.
அவார்டை வாங்கிக் கொண்டு ஆட்டம் பாட்டத்தில் இருப்பவர்கள் இனியாவது அக்கறையோடு மக்கள் பணி செய்வார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.