மாநாடு 01 June 2023
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா , திருவலஞ்சுழி கிராமத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் சாலை இந்தியா முழுவதும் இருந்து சுவாமி மலை முருகன் கோயிலை காண வரும் பக்தர்கள் பயன்படுத்தும் மிக முக்கிய சாலையாகும்.
அந்த சாலையின் மைய பகுதியில் அமைந்துள்ள அரசாலாறு பாலத்தின் இருபுறமும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டி சுவாமிமலை கோயில் முன்பாக ஒரு குப்பை மலையை உருவாக்கி உள்ளனர். அந்த குப்பை மலையின் உயரத்தை குறைக்கும் முயற்சியாக அந்த குப்பை மலையின் அடிவாரத்தில் தினமும் தீ வைக்கப்படுகிறது.
அந்த குப்பை மலையின் அங்கமான பிளாஸ்டிக் கழிவுகள் அந்த தீயில் வெந்து பெரும் புகை மண்டலம் உருவாகி அந்த சாலையில் வரும் பக்தர்களை தாக்குகிறது. கண் எரிச்சல், இருமல், மற்றும் வயிற்று குமட்டலுடன் பக்தர்கள் கோயிலை நோக்கி நொந்தபடி கந்தனை காண செல்கின்றனர். இந்த குப்பை மலை இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் புகையை கக்கி வருவதால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வெகு விரைவில் கேன்சர் மற்றும் சுவாசம் தொடர்பான நோய்களில் சிக்கும் ஆபத்து உள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு இந்த குப்பை மலையை அகற்றி வேறு மறைவான பகுதியில் குப்பைகளை சேமிக்கவும், மறு சுழற்சி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
இதனை சம்பந்தப்பட்டவர்கள் விரைவாக சரி செய்ய வேண்டும் காலம் தாழ்த்தி அலட்சியமாக இருந்தால் வருகிற மாதம் வெளியாக இருக்கும் அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு புலனாய்வு மாத இதழில் மேலும் விரிவாக செய்தியை வெளியிட்டு இந்த குறைகளை சரி செய்ய கொண்டு செல்ல வேண்டியவர்களிடம் கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்க வைத்து சரி செய்யப்படும்.
செய்தி : மணி