மாநாடு 08 ஜீன் 2023
ஆறு இல்லையென்றால் யாருக்கு என்ன என்ற போக்கில் போகாமல் நமக்கான கடமையை ஊடகத்தின் வாயிலாகவும் நின்று கொண்டு சேர்க்க வேண்டியவர்களுக்கு சென்று சேரும் அளவில் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது மாநாடு செய்திக் குழுமம்.
அதன்படி திமுக ஆட்சி அமைத்த உடன் தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் செய்வதற்காக ஏறக்குறைய 100 கோடி ரூபாய் ஒதுக்கி வெண்ணாறு உள்ளிட்ட பாசன ஆறுகளை, கால்வாய்களை தூர்வாரும் பணியை துரித ப் படுத்தச் சொல்லி தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.கஸ்டாலின் நிதியையும் ஒதுக்கி இருந்தார்.
தூர்வாரப்பட்டதாக கூறப்பட்டு முதல்வரையும் அழைத்து வந்து அதிகாரிகளும் , அவர் கட்சியினரும் பார்வையிட வைத்தார்கள். ஆனால் உண்மையில் அப்போதே முறையாக தூர்வாரப்படவில்லை என்பதனை தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு சுட்டிக்காட்டி வருகிறோம். சிலரிடம் ஏன் இந்த ஆறுகள் இருந்த அந்த நிலையும் விட மோசமாக ஆறுகள் என்பது போக வாய்க்கால்களாக மாறி இருக்கிறது என்பதை நாம் கேட்டபோது ஒதுக்கப்பட்ட நிதி பதுக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள் விவசாயிகள்.
இந்நிலையில் நாளையும் தஞ்சையில் தூர்வாரப்பட்டு இருக்கும் ஆறுகளை நீர் பாசனங்களை பார்வையிட முதல்வர் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறுகளின் அவல நிலைக்கு என்ன காரணம் ? என்ன செய்ய வேண்டும்? யார் மறைக்கிறார்கள்? விரிவான செய்திகள் அடுத்து வரும் அரசியல் மாநாடு இதழில்.