மாநாடு 12 July 2023
கொரோனா பெருநதொற்று ஏற்பட்டு என்ன செய்வது என்றே தெரியாமல் உலகமே திண்டாடி நின்ற நிலையில் தூய்மை பணியாளர்களையும், செவிலியர்களையும் நமக்கான தேவ தூதர்களாக பார்த்து போற்றி நீங்கள் தான் கடவுள் என்று வணங்கிய காட்சிகள் எல்லாம் உண்டு ஆனால் பேரிடர் காலங்கள் முடிந்தவுடன் பல இடையூறுகளில் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம் இதனை நாங்கள் பலமுறை ஆளும் திமுகவின் அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் மனுக்கள் கொடுத்து கோரிக்கைகள் வைத்து எவ்வித பலனும் ஏற்படவில்லை என்று வெந்து நொந்த துப்புரவு தொழிலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராடி வருகிறார்கள்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று துப்புரவு தூய்மையாளர்கள் தங்களது கோரிக்கையை அரசுக்கு தெரிவித்தும் அரசு அதனை செவிமடுக்கவில்லை என்று கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள் அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் புகைவண்டி நிலையத்தின் வெளிப்புறத்தில் போராட்டம் நடைபெற்றது .இப்போராட்டத்தில் தஞ்சாவூர் நகர தூய்மை பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த சுமார் 300 நபர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை முழக்கங்களை முன் வைத்தார்கள்.
இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் பங்கேற்று தங்களது ஆதரவை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு தெரிவித்து அரசுக்கும் அழுத்தம் கொடுக்கும் விதமாக உரையாற்றினார்கள்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இப்போதுதான் கோரிக்கைகள் வைக்கிறீர்களா என்ற கேள்வியை முன் வைத்தோம் இல்லீங்க தஞ்சாவூரில் கமிஷனர் சரவணகுமாரிடம் எங்களது கோரிக்கையை முன்வைத்து மனுக்கள் கொடுத்திருக்கிறோம், தஞ்சாவூர் மாநகர மேயர் சண். ராமநாதனிடம் எங்களது கோரிக்கையை சொல்லி பலமுறை மன்றாடி இருக்கின்றோம் ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் யாருமே எங்களுக்கு செய்யவில்லை அது மட்டுமல்லாமல் எங்களுக்கு சம்பளம் கூட சரியாக கொடுக்கலைங்க நாங்கள் சுத்தம் செய்வதற்கு பொருட்களைக் கூட அதாவது கையுறை சீருடைகள் போன்றவற்றைக் கூட இந்த மாநகராட்சி எங்களுக்கு கொடுக்கலிங்க ஆனாலும் தமிழ்நாட்டிலேயே சிறந்த மாநகராட்சி இது என்று சொல்லிக் கொள்கிறார்கள் ஆனால் நாங்கள் இப்போதும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறோம். திமுக ஆட்சி அமைத்தால் எங்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பினோம்ங்க ஆனால் இப்படி இவர்கள் செய்வார்கள் என்று கொஞ்சம் கூட நினைக்கல என்று தங்களது மனக்குமுறல்களை கொட்டினார்கள்
அது முழுவதையும் மாநாடு ( maanaadu7592 )youtube சேனலில் வெளியிடுகிறோம். வருகிற மாதம் வர இருக்கிற அரசியல் மாநாடு இதழிலும் வெளியிடுகிறோம் பாருங்கள் படியுங்கள்.
குடிப்பவர்களின் துயர்துடைக்க துடிக்கின்ற அரசு…தேசத்தை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் துடிப்பதை இனியும் வேடிக்கை பார்க்கலாமா என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தமிழக அரசும் தஞ்சாவூர் மாநகராட்சியும் இனியாவது துயர் துடைக்குமா அல்லது வேடிக்கை பார்க்குமா ?