Spread the love

மாநாடு 26 March 2022

கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாணவியின் பெற்றோர் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், ராமநாதபுரம் அருகே குதக்கோட்டை கே.கே.கே.வலசைப் பகுதியைச் சேர்ந்த சிவன்ராஜ். இவர், 12ஆம் வகுப்பு படிக்கும் 16 வயதான எங்கள் மகளை பின்தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தியுள்ளார். வழியில் நண்பருடன் சேர்ந்து மிரட்டி தனது அலைபேசியில் படம் பிடித்துள்ளார். பின்னர் அதை காட்டி மிரட்டி வந்துள்ளார்.

இது குறித்து மகள் எங்களிடம் கூறினார். இதுகுறித்து கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் சமரசம் செய்தனர். நாங்கள் ஏற்க மறுத்ததால் சிவன்ராஜ் மீது மார்ச் 20ல் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்தனர். ஆனால் இதுவரை கைது செய்யவில்லை.

இந்நிலையில், சிவராஜ் ஊரை சேர்ந்த மதியழகன், பிரபாகரன், முனியசாமி, முருகானந்தம், கர்ணமகாராஜா, மற்றொரு முனியசாமி ஆகியோர் வழக்கை திரும்பத் தருமாறு மிரட்டுகிறார்கள்.. மேலும் ஊர் வழியாக செல்லும் பாதையை அடைத்தும், குடிநீர் லாரி செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.

சிவராஜ் மீது புகார் அளித்ததால் எங்களை அவமானப்படுத்துவதற்காக மார்ச் 24ல் எனது மகளின் புகைப்படங்களை முகநுாலில் பதிவிட்டுள்ளனர். இதனால் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் மன நிலையில் உள்ளோம். தக்க நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தது, இதனை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

27060cookie-check12ம் வகுப்பு மாணவியின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டவர்கள் மீது புகார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!