மாநாடு 19 May 2022
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பஞ்சாப் மாநில தேர்தலில் 117 இடங்களில் 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது.அம்மாநிலத்தின் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார் .இந்நிலையில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருவதாக கூறி விவசாயிகள் ஜூன் மாதம் 18ம் தேதி நெல் விதைப்பு செய்யும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது .ஆனால் விவசாயிகள் ஜூன் மாதம் 10ம் தேதி நெல் விதைப்புக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் கோதுமை பயிருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் .
விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் சண்டிகருக்கு ஊர்வலமாக செல்ல முயற்சித்தனர். காவல்துறையினர் அவர்களை தலைநகருக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர்கள்.விவசாயிகள் ஊர்வலம் பாதியில் நிறுத்தப்பட்டதால் சண்டிகர் மொஹாலி எல்லையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர் பகவந்த் மான் விவசாயிகளின் இப்போராட்டம் விரும்பத்தகாதது, அதுமட்டுமல்லாமல் தேவையற்றது, நிலத்தடிநீர் குறைந்துள்ளது மாநில அரசு சரி செய்யும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இதில் விவசாய சங்கங்களும் தங்களது பங்களிப்பை கொடுத்து ஈடுபடவேண்டும் அதை விடுத்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுவது தேவையற்றது நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டிய வேலையை செய்வது என்ன அவ்வளவு பெரிய குற்றமா என்று கேள்வி எழுப்பியவர் ஜூன் 10-ஆம் தேதிக்கும் 18-ம் தேதிக்கும் அப்படி என்ன வேறுபாடு எவ்வளவு நாட்கள் வித்தியாசம் நீங்களே கூறுங்கள் என்றார். குறைந்தபட்சம் விவசாயிகள் 1 ஆண்டாவது எனக்கு ஆதரவாக கரம் கோர்த்து நில்லுங்கள். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.