Spread the love

மாநாடு 6 May 2022

முன்பெல்லாம் சின்னம்மா, பெரியம்மா ,அம்மாவைப் பெற்ற அம்மா போன்ற நமது குடும்பத்தைச் சார்ந்த அம்மாக்கள் உறவுகள் உணவுகளை தயாரித்து தங்களது குழந்தைகளுக்கு உறவுகளுக்கு கொடுத்து வந்தார்கள் அப்போதெல்லாம் உணவே மருந்தாக இருந்தது இப்போதெல்லாம் மருந்தே உணவாக இருக்கிறது என்பதை நாள்தோறும் நடைமுறை வாழ்வியலிலும் நடைபெறும் செய்திகளின் வாயிலாகவும் நாம் அறிய முடிகிறது. நாள்தோறும் நாட்காட்டி நாட்களை காட்டத் தவறினாலும் கூட உணவே நஞ்சான செய்தியை நாளிதழ்கள் காட்ட தவறுவது இல்லை . ஆங்காங்கே சில இடங்களில் கெட்டுப்போன உணவுகள் பரிமாறப்பட்டது போக இப்போது பல இடங்களில் அங்கங்கே நஞ்சான உணவு பரிமாறப்படுகிறதை அறியமுடிகிறது.

அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பாக கேரளா மாநிலத்தில் சவர்மா சாப்பிட்ட சிறுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார் என்ற செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையொட்டி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் சவர்மா கடைகளில் இருந்து கெட்டுப்போன பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்களான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் 22, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பரிமலேஸ்வரன் 21, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் 22, ஆகியோர் நேற்றிரவு ஒரத்தநாடு பிரிவு சாலை பெட்ரோல் பங்க் அருகிலுள்ள துரித உணவகத்தில் சவர்மா சாப்பிட்டதாக தெரியவருகிறது.

சாப்பிட்டுவிட்டு நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே சில நிமிடங்களிலேயே அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு அருகில் இருந்த ஒரத்தநாடு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் உலகத்தில் எல்லாமே வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற காரணத்தினால் இதுபோன்ற வேகாத உணவுகளை வேக உணவுகள் என்று நினைத்து நம்பி உணவு அருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல உணவுகளை கொடுத்து பணம் சம்பாதித்தால் புண்ணியமும் சேரும், பணமும் சேரும் என்பதை உணவக உரிமையாளர்கள் உணர வேண்டும். இது போன்ற மாணவர்கள் சொந்த ஊரைவிட்டு, உறவுகளை விட்டு படிக்க நம்ம ஊர்களுக்கு வந்திருக்கிறார்கள் வந்தவர்களுக்கு உறவுகளே நாம் தான் என்பதை உணர்ந்தாள் இது போன்ற நிகழ்வுகள் நடைைபெறுவதை தவிர்க்கமுடியும்.

33690cookie-checkதஞ்சையில் சவர்மா சாப்பிட்ட மாணவர்களுக்கு பாதிப்பு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி பரபரப்பு

Leave a Reply

error: Content is protected !!