Spread the love

பிப்ரவரி 19ந்தேதி தேர்தல் 

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி19ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள்,
138 நகராட்சிகள்,
490 பேரூராட்சிகள் என
649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள
1064 மாநகராட்சி உறுப்பினர்கள்,
3468 நகராட்சி உறுப்பினர்கள்,
8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என்றும், கொரோனாவை காரணம் காட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கூடாது என்ற அரசின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தனர். இதன் பின்னர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விதிமுறைகள் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுயிருந்தது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் இப்போது அறிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கம் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கூறியதாவது : தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்தார்.

10440cookie-checkபிப்ரவரி 19ந்தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!