மாநாடு 5 May 2022
சமீபகாலமாக பல உணவு விடுதிகளில் பொறுப்பற்ற தன்மையாலும், தூய்மை இன்மையாலும் பல கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்வது தொடர் கதையாகி வருகிறது இது போல புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரவேல் இவர் தனக்கு சொந்தமான வீட்டில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார். மேல்தளம் அமைப்பதற்காக கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.நேற்று இவர்களுக்கு வீட்டு உரிமையாளர் அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் இருந்து 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட கட்டிட தொழிலாளர்கள் 11 பேரும் வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக தெரியவருகிறது. அதிர்ச்சி அடைந்த கட்டிட உரிமையாளர் சித்திர வேல் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
