மாணவர்களுக்கு மடிக்கணினி எப்போது வழங்கப்படும் தமிழக விளக்கம்.
தமிழக அரசு
கொரோனா பேரிடர் காலத்தில் குறைந்த விலையில் டெண்டர் எடுக்க யாரும் முன்வராத காரணத்தால்,இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை என தமிழக கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் சூழ்நிலை உருவானது.இதனால் அனைத்து பொருள்களின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளதாகவும்
இதுப்போன்ற காரணங்களால் கடந்த கல்வி ஆண்டு மற்றும் நடப்பு கல்வி ஆண்டு என 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கமுடியவில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
அதில் கொரோனா பாதிப்பு காரணமாக மடிக்கணினி மற்றும் கணிணி விலை கனிசமாக உயர்ந்துள்ளதாகவும்,
மடிக்கணிணிகளை தயாரித்து வழங்கக்கூடிய நிறுவனங்கள் அதிக விலைக்கு டெண்டர் கோருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசால் மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணிணிகள் மிக குறைந்த விலையில் தயாரிக்கப்படக்கூடியவை என்பதால் எந்த நிறுவனமும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தான் மாணவர்களுக்கு இரண்டு கல்வி ஆண்டுகளாக மடிக்கணிணிகள் வழங்கப்படவில்லை என்றும், மாணவர்களின் நலன் கருதி மீண்டும் மடிக்கணிணிகள் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணிணிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடந்துள்ளார்கள் குறிப்பிடத்தக்கது