Spread the love

மாநாடு 29 March 2022

கடலூர் அடுத்த குண்டு உப்பலவாடி சேர்ந்த சரவணன் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் பேப்பர் ஸ்டோர் வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை செய்த 21 பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சரவணன் நேற்று வேலை முடிந்த பிறகு தனது இருசக்கர வாகனத்தில் தனது காதலியை அழைத்துக் கொண்டு பேருந்து நிலையத்தில் விடுவதற்காக கம்மியம் பேட்டை இணைப்பு சாலையில் வந்துள்ளார்.

அப்போது தனியார் பள்ளி அருகே பயன்பாடு இல்லாத வீட்டில் அமர்ந்து பேசி இருக்கிறார். அப்போது அங்கு வந்த மூன்று நபர்கள் அவர்களை மிரட்டி நகையையும், செல்போனையும் பறித்துள்ளனர். பின்னர் காதலனை கட்டிப்போட்டு விட்டு காதலன் கண்முன்னே ஒரு நபர் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் அதை மற்ற நபர்கள் தனது செல் போனில் வீடியோ எடுத்ததுடன் அவர்களும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என அவர்களை மிரட்டி அனுப்பியுள்ளனர். பின்னர் அப்பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று கடலூர் மஞ்சக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டு காதலன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அங்கு நின்றிருந்த பாதிக்கப்பட்ட பெண் மிகவும் சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பெண்ணிடம் அவ்வழியாக ரோந்து சென்ற காவல்துறையினர் விசாரணை செய்ததில் அப்பெண்ணிற்கு உடல் உபாதை ஏற்பட்டு உள்ளதாக கூறி மறைத்துள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் உடனடியாக அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரணை செய்ததில் நடந்த அனைத்து உண்மைகளையும் அப்பெண் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காதலனை நேரில் அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்னர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களையும் காவல்துறையினர் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குப்பன்குளம் பகுதியை சேர்ந்த கிஷோர் (19), சதிஷ் (19), புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆரிப் (18) ஆகிய 3 பேர் என தெரியவந்தது. மேலும் அவர்கள் மது போதையிலிருந்ததனால் இது போன்ற செயலில் ஈடுபட்ட தாகவும் சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மூவரையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை வைத்து பார்க்கும்போது இந்தக் குற்றச் சயலில் ஈடுபட்ட அனைவருமே 20 வயதைக் கூட தாண்டவில்லை என்பதும் அதற்குள்ளாகவே மது போதைக்கு ஆட்பட்டு இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்று இச் செய்தியின் வாயிலாக தெரிய வருகிறது. வருங்கால இளைஞர்களுக்கு பாதையை அமைத்துக் கொடுக்க வேண்டிய அரசு போதையை ஊத்திக் கொடுக்கிறது என்பது மாபெரும் பாவம் இந்தப் பாவத்தை இனியாவது நிறுத்துமா அரசு பொருத்திருந்து பார்ப்போம்.

27740cookie-checkகூட்டு பலாத்காரம் வீடியோ எடுத்த கொடூரர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!