Spread the love

மாநாடு 10 February 2023

தங்கள் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாக்கும், இவ்வாறு தூய்மையை பேணி காப்பதன் மூலம் மட்டுமே நோய்கள் உற்பத்தி ஆவதையும் நோய்கள் பரவுவதையும் தடுக்க முடியும் என்பதே நிதர்சனம். அதிலும் மக்கள் அதிகம் கூடுகின்ற பொது இடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி தூய்மையாக இந்தப் பகுதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால் மன்னார்குடியில் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பாக புதிதாக கட்டி திறக்கப்பட்ட அலுவலகத்தின் அவல நிலையை விரிவாக பார்ப்போம்:

மன்னார்குடியில் புதிதாக கட்டி முடித்து ஒரு மாதத்திற்கு முன்பு திறந்துவைக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறை கவனிப்பாரின்றி அசுத்தமான நிலையில் மிக மோசமாக நோய் தொற்று ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.

ஒவ்வொரு அலுவலகத்திலும் சில்லறைச்செலவின நிதியில் ஊதியம் வழங்கி இதற்கான பணியாளர்களை நியமனம் செய்வார்கள். அவ்வாறு இங்கு பணி நியமனம் செய்யப்பட்ட துப்புரவாளர்களின் பணியினை அலுவலர்கள் கண்காணிக்க வில்லையா அல்லது இந்தப் பணிகளுக்கு பணியாளர்களையே இங்கு நியமிக்கவில்லையா? நியமனம் செய்யவில்லை என்றால் அதற்காக ஒதுக்கப்படும் நிதி எங்கே போகிறது? என்கிற கேள்வி எழுகிறது உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள், தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த அலுவலகத்தில் மட்டுமல்லாமல் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தூய்மையை பேணி காக்க வேண்டும், நமது மாநாடு செய்தி குழுமம் கள ஆய்வு செய்து தவறு நடக்கும் அலுவலக, அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் .இவ்வாறு எங்கெல்லாம் இருக்கிறது என்பதை நமது இதழுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தகவல்களை பொதுமக்கள் அனுப்பி வைக்கலாம் தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் யாரிடமும் தெரிவிக்கப்படாது.

மனசாட்சி இல்லாமல் அலட்சியமாக இருப்பவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதிகாரிகள் திருந்துவார்களா ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா பொறுத்திருந்து பார்ப்போம்.

64950cookie-checkநாற்றத்தில் அரசு அலுவலகம், நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!