Spread the love

மாநாடு 21 September 2022

தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலகத்துடன் ஒரத்தநாடு, கும்பகோணம் கல்வி மாவட்டங்களை இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், அரசு பள்ளி பாதுகாப்பு இயக்கம் சார்பிலும், ஒரத்தநாடு மற்றும் கும்பகோணம் கல்வி மாவட்டங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் அதனை இயங்காமல் செய்துவிட்டு ஒவ்வொன்றிற்கும் தஞ்சாவூரில் அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு வந்து முறையிட்டு சரி செய்ய வேண்டும் என்ற நிலையை உண்டாக்கக் கூடாது அந்த நிலை ஏற்பட்டால் அதற்கே அரசு பள்ளியின் பெரும்பாலான நேரம் செலவிடப்படும் இதனால் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கற்பித்தல் உட்பட பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் எனவே 2018 ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக எப்படி பிரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறதோ அதேபோல இப்போதும் இயங்க விட வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று காலை மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 

மேலும் அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது : ஒரத்தநாட்டில் அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தை பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலகத்தோடும், கும்பகோணத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட கல்வி அலுவலகத்தை, தஞ்சையில் அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தோடும் இணைக்கப்படும் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகளின் கல்விதரம் பின்னடைவு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.


ஒரத்தநாடு மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள கிராமங்களில் அமைந்துள்ள பள்ளிகளை நேரடியாக கவனம் செலுத்தி நிர்வகிக்கவும், மாணவர்கள் கல்வி தரம் மேம்பட வசதியாக கல்வி மாவட்டங்கள் அமைக்கப்பட்டது.
இதன் காரணமாக இப்பகுதியின் கல்வித் தரமானது உயர்ந்து வளர்ச்சி பெற்றது.

தஞ்சை மாவட்டத்திலேயே கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் தான் அதிக மாணவர்கள் உள்ளனர். இப்பகுதியில் பெரும்பாலான அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் கிராமப்புறங்களில் உள்ளது.
ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் ஒரத்தநாடு மற்றும் கும்பகோணம் கல்வி மாவட்டங்கள் கடந்த காலங்களில் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளது.
ஆகவே, மாணவ மாணவிகள் நலன் கருதியும் ,இப்பகுதியின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும், ஒரத்தநாடு மற்றும் கும்பகோணத்தின் கல்வி மாவட்டங்கள் தொடர்ந்து செயல்பட வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, அரசு பள்ளி பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் இரா. அருணாச்சலம், பூவத்தூர் பிரசன்னா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ந.பாலசுப்பிரமணியன், ஆர்.பி.முத்துக்குமார், ஏ.ராஜேந்திரன், ஏ.சகாதேவன், ஏஐடியூசி மாவட்ட துணைசெயலாளர். துரை.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீடியோ லிங்க் இதோ:https://youtu.be/mnSXNtVdFkM

50981cookie-checkதஞ்சாவூரில் தனியார் பள்ளிக்கு அரசே துணையா தவறினால் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!