Spread the love

மாநாடு 5 April 2022

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஜிஎஸ்டி தொடர்பான முடிவுகளை எடுக்க அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

ஜிஎஸ்டி தொடர்பான புகார்கள், கோரிக்கைகள், குறைகள் பற்றி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும். மேலும், புதிய விதிமுறைகளை உருவாக்குவது, வட்டி விகிதங்களை மாற்றுவது பற்றியும் ஜிஎஸ்டி கவுன்சிலில் அவ்வப்போது முடிவு செய்யப்படும்.

எனினும், ஜிஎஸ்டி தொடர்பாக அடிக்கடி பொய் செய்திகள் தீ போல பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்படுவதும் வழக்கமாகிவிட்டது.

இவ்வகையில், வீடு மற்றும் கடை வாடகை தொகைக்கு 12% ஜிஎஸ்டி விதிக்க அரசு திட்டமிட்டு வருவதாக அண்மையில் ஒரு தகவல் வெளியாகியது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் தீபோல பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும், வீடு மற்றும் கடை வாடகை தொகைக்கு 12% ஜிஎஸ்டி விதிக்க நிதியமைச்சம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகமும் (PIB) இந்த தகவலின் உண்மைத்தன்மையை கண்டறிந்து தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், “வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பது பற்றி நிதியமைச்சகம் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. பொய் தகவலை பகிராமல் தவிர்க்கவும்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.

ஜிஎஸ்டி என்றால் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்று பொருள்படும்.

29010cookie-checkவீட்டு வாடகைக்கும் ஜிஎஸ்டி அதிர்ச்சியில் மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!