Spread the love

மாநாடு 4 May 2022

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் தருமபுரம் ஆதினம் குரு மகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.இதற்கு பாஜக,பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து தடையை நீக்க வேண்டும் என கூறியிருந்தார்கள் சட்டமன்றத்தில் அதிமுக இது சார்பாக கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்று தானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்திருந்தார். தஞ்சாவூர் அருகே கலிமேட்டில் உயர் மின் அழுத்த மின்கம்பி உரசி விபத்தில் தீக்கிரையான அப்பர் பல்லக்கை பார்வையிட்ட மன்னார்குடி ஜீயர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியின் போது பட்டின பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது இதுபோல தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் ஒரு அமைச்சரும் சாலையில் நடக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

33570cookie-checkஒரு அமைச்சரும் வீதியில் நடமாட முடியாது ஜீயர் எச்சரிக்கை

Leave a Reply

error: Content is protected !!