மாநாடு 5 April 2022
இப்போதெல்லாம் கள்ளத்தனம் செய்வதற்கு கவர்ச்சிகர பெயர் சூட்டல் நாள்தோறும் நடந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். குடி நோயாளிகளுக்கு மது பிரியர்கள் என்றும், சுயத்தை மறந்து பிழைப்பதற்கு தோழமை சுட்டு என்றும், கள்ளக்காதலுக்கு திருமணம் கடந்த உறவு என்றும் அத்துணை அயோக்கியத் தனத்திற்கும் அழகழகாக பெயர் சூட்டபவர்களை பெண்ணிய போராளிகள் என்றும் புரட்சிய வாதிகள் என்றும் பலர் போற்றி கொண்டிருப்பதாலும் சமூகத்தில் இது போன்ற நிகழ்வுகள் நாள்தோறும் நடந்துகொண்டே இருக்கிறது. அப்படித்தான்
இராணிப்பேட்டை மாவட்டம், சின்ன குக்குந்தை பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். மகேஸ்வரிக்கு திருமணத்தை கடந்து பலருடன் தொடர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால்ம் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டடுள்ளது.
கடந்த வாரம் தாய்வீட்டிற்கு சென்றுவருவதாக கூறிய அவர் நீண்ட நேரமாகியும் அவர் வராததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அந்த பகுதியில் உள்ள கிணறில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவருடன் தொடர்பில் இருந்தவர்கலை விசாரணை செய்தனர். அந்த பகுதியை சேர்ந்த பிரபுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பிரபுவிற்கும் மகேஸ்வரிக்கும் இடையில் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.