*ஏறுத்தழுவுதல் ஜல்லிக்கட்டுஆனது இப்படி தான்*
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் கிராமத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் ‘
ஜல்லிக்கட்டு’ மாடு பிடிக்கும் வீர விளையாட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டில் உள்ள விறுவிறுப்பும் மானத்தமிழ் வீரர்கள் மன உறுதியும் …
*மது குடித்து* மானங்கெட்டு சாவோர்கள் மத்தியில்
*மாடுப்பிடுத்து* மாடு முட்டி சாவது மேல்
என்றிருக்கும் அவர்களின் வீரமும்
இன்று உலக அளவில் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு மரியாதை ஏற்பட செய்திருக்கிறது.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை செய்யப்பட்ட போது சாதி மத வேறுபாடு இல்லாமல் ஆண்கள், பெண்கள் , சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் வீதி இறங்கி போராடி மீண்டும் நமது பாரம்பரியத்தை நிலைநாட்டி தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்வு முறை இருந்தாலும் கூட அதே வீரமும்,மானமும், மங்கி விடவில்லை என்று உலகுக்கு பறைசாற்றினார்கள்.
சங்க இலக்கியமான கலித்தொகை
*கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்*
என்றுரைக்கிறது. அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை:
“கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்.” என்பதாகும்.
பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் கோனார் மக்களிடம் ஏறு தழுவுதல் நடைபெற்று வந்ததாம். ஆயர் குல வாலிபர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்கி வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குல பெண்.
50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘ *சல்லி காசு’* என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் வந்தது மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பை (சல்லி காசுகளை) பரிசாக கொடுத்தார்கள் .
இந்த காரணத்தை வைத்தே ஏறுதழுவுதல் என்ற பெயர் பிற்காலத்தில் ‘சல்லிகட்டு’ என்று மாறியது.
பேச்சு வழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ என்று ஆனது.ஜல்லிக்கட்டு போராட்டாத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நமது மாநாடு இதழின் *வாழ்த்துக்கள்* .