மாநாடு 12 August 2022
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தயிர் வெண்ணை விலையில் 5 ரூபாய் விலை உயர்வை அறிவித்தது,
இந்நிலையில் தமிழகத்தில் விற்கப்படும் தனியார் பால் நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தின் பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் பால் தேவையில் 84 விழுக்காடு பால் தேவையை தனியார் நிறுவனங்கள் பூர்த்தி செய்து வருகிறது, இந்த சூழலில் சீனிவாச பால் நிறுவனம் லிட்டருக்கு 2 ரூபாயையும், ஹட்சன் நிறுவனம் தயிர், பால் உள்ளிட்டவற்றிற்கு லிட்டருக்கு ரூ.4 ரூபாயும் விலை உயர்த்தி இருக்கிறது இதன் காரணமாக பால் சார்ந்த அனைத்து பொருட்களின் விலையும் உயரக்கூடும் இதனைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் விலையை உயர்த்தப் போவதாக தெரிய வருகிறது.
470020cookie-checkஇன்று முதல் பால் விலை இவ்வளவு உயர்வா மக்கள் அதிர்ச்சி