Spread the love

மாநாடு 29 August 2022

நாட்டின் வளர்ச்சி என்பது புதிய விமான நிலையம் அமைப்பதிலும், நெடுஞ்சாலை விரிவாக்கத்திலும் மட்டுமா இருக்கிறது, ஒவ்வொரு நாட்டின் விலை மதிப்பில்லாத பொக்கிஷங்களாக கருதி போற்றி பாதுகாக்க வேண்டிய இளைஞர்கள் மாணவர்களிடத்திலுமல்லவா இருக்கிறது.

தமிழ்நாட்டில் அன்றாடம் வேலைக்கு செல்பவர்களிடம் சாலைகள் இருக்கும் நிலையை கேட்டால் தெரியும் அல்லது தனது சொகுசு காரை விட்டு வேறு வாகனத்தில் பயணித்தால் அரசு அதிகாரிகளுக்கும் ,ஆட்சியாளர்களுக்கும் தெரியும் சாலையில் உள்ள குண்டு குழிகள் எவ்வளவு பெரிய விபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய நிலையில் பல ஊர்களில் இருக்கிறது என்பது.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் விளாங்குடியை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் பிரபாகரன் ஆரம்பாளையத்தில் உள்ள தனது அரசு உதவி பெறும் பள்ளிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் படியில் நின்றவாறு பயணம் செய்துள்ளார்.

பள்ளிக்கு, வேலைக்கு ,கல்லூரிகளுக்கு செல்லும் நேரம் என்பதால் பேருந்தில் கூட்டம் அதிக அளவில் இருந்துள்ளது, அதே சமயம் பள்ளிக்கு நேரத்தில் செல்ல எண்ணி படியில் தொங்கியப்படியே பயணத்தை மேற்கொண்டுள்ளார் மாணவர் பிரபாகரன்.பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து தவறி விழுந்த பிரபாகரன் தலையில் பலமாக அடிபட்டு இருக்கிறது உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அரசு மருத்துவமனைக்கு மாணவரை கொண்டு சென்றுள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்திருக்கின்றனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காலை, மாலை கூட்ட நெரிசல் உள்ள நேரங்களிலாவது அதிக அளவில் பேருந்துகளை இயக்குங்கள், சாலைகளில் உள்ள பழுதை நீக்குங்கள் என்கின்றனர் வாக்களித்த மக்கள்.

48560cookie-checkஅரசு பள்ளி மாணவர் மரணம் அரசு செய்ய வேண்டியது என்ன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!