மாநாடு 2 September 2022
மருத்துவராகும் பெருங்கனவோடு படித்து வந்த மாணவி அனிதா நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராடி தனது இன்னுயிரை இழந்து நேற்றோடு 5 ஆண்டுகள் ஆகிறது,
அப்போது அதிமுகவால் நீட் தேர்வை நிறுத்த முடியாது ஏனெனில் அதிமுக மத்திய அரசின் அடிமையாக இருக்கிறது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரியும் என்று தேர்தலின் போதும் அதற்கு முன்பும் ஒவ்வொரு இடங்களிலும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பேசி வந்தார். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் நீட் தேர்வால் இறப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் செல்கிறது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை எப்போது வெளிப்படுத்தி நீட் தேர்வை தடுப்பார்கள் என்று தெரியாத சூழலில் நீட் தேர்வினால் ஏற்படும் மரணம் தொடர்கதையாகி வருகிறது.
அதன்படி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குலசேகர மங்கலம் என்கிற கிராமத்தில் வாழ்ந்து வரும் அமல்ராஜ் வெண்ணியார் என்பவர்களின் மகள் ராஜலட்சுமி தொடர்ந்து இதற்கு முன்பும் இரண்டு ஆண்டுகள் நீட் தேர்வு எழுதி தோல்வியுற்ற நிலையில் இந்த ஆண்டும் 3வது முறையாக நீட் தேர்வை எழுதியிருக்கிறார்.
இந்த தேர்வின் முடிவுகள் வருகிற 7ஆம் தேதி வெளிவர இருக்கிறது, இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் மாணவி ஜெயலட்சுமி இருந்ததாக தெரிய வருகிறது தேர்வு முடிவுகளுக்கு முன்பாக கீ ஆன்சர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்விலும் தான் தோல்வியுற்றால் தந்தையின் கனவை நிறைவேற்ற முடியாத மகளாக ஆகி விடுவோமோ என்ற பயத்தில் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த சேந்தமரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி சங்கரன்கோயில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் பெற்றோர்களிடத்தில் மிகுந்த கவலையை உண்டு பண்ணி உள்ளது.
அரசியல்வாதிகள் இந்த தேர்வை தடுத்து வைக்க வேண்டும் முடியவில்லை என்றால் வெளிப்படையாக சொல்லி மாணவர்களை படிக்க வைக்க வேண்டும் அதை விட்டுவிட்டு வெற்று வாக்குறுதியை கொடுத்து விலை மதிப்பற்ற பிள்ளைகளின் உயிரை பறிக்கக் கூடாது ,அதேபோல உலகில் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்காக எண்ணில் அடங்கா படிப்புகள் இருக்கின்றது அதனை எல்லாம் விட்டுவிட்டு மருத்துவ படிப்பு தான் உயர்ந்தது என்ற சிந்தனையை மக்கள் மனதில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும். மருத்துவ கணவால் மாண்ட கடைசி மாணவி இவராக இருக்க வேண்டும். அடுத்த மரணத்திற்குள்ளாகவாவது நீட் தேர்வின் உண்மை நிலைப்பாட்டை அரசு வெளிப்படையாக தெளிவுபடுத்த வேண்டும்.