மாநாடு 3 September 2022
உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்குவது தமிழ் மொழி தான் என்கிறார்கள் அறிஞரகள் இவ்வாறு பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தமிழ் மொழி தமிழ்நாட்டில் தமிழர்கள் வழிபாடு செய்யும் கோயில்களில் கூட இல்லை இந்த கோயில்களில் அர்ச்சனைகள் உட்பட அனைத்தும் வேற்று மொழியிலேயே இருந்தது.
நாடு தமிழ்நாடு , கோயிலை கட்டியவன் தமிழன், தமிழ் மொழியில் வழிபட கூட முடியவில்லை என்று பல தமிழ் அறிஞர்கள் பல்வேறு விதங்களில் தங்களது போராட்டங்களை முன்னெடுத்தார்கள் அதன் விளைவாக தமிழக அரசு கோயில்களில் தமிழில் அர்ச்சனைகள் செய்யப்பட வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தது ஆனாலும் கூட பல கோயில்களில் அரசாணையை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்து வந்தன.
அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாம் தமிழர் கட்சியினருக்கு கீழ்க்கண்டவாறுஅறிக்கை விட்டிருந்தார்: அன்னை தமிழ் மொழிக்காக போராடிய போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு நாளான செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சென்று கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்யுங்கள் அதேபோல நாம் தமிழர் பிள்ளைகளும் தமிழில் அர்ச்சனை செய்யுங்கள் ஒருவேளை தமிழில் அர்ச்சனை செய்ய எங்காவது மறுக்கப்பட்டால் அங்குள்ள அதிகாரியிடம் சென்று முறையிடுங்கள் என்று அறிவுறுத்தி இருந்தார் அதன்படி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கோயில்களிலும் நாம் தமிழர் உறவுகள் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வருகிறார்கள்.
அதன்படி தஞ்சாவூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற தமிழரின் அறிவின் அடையாளமாக திகழ்கின்ற பெருவுடையார் திருக்கோயிலில் நாம் தமிழர் உறவுகள் இன்று காலை 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் புலவர் கிருஷ்ணகுமார், நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் நாடாளுமன்றச் செயலாளர் கந்தசாமி உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார்கள். அதனைத் தொடர்ந்து மாலையில் தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலிலும் தமிழில் அர்ச்சனை செய்து வழிபட்டார்கள் . இந்நிகழ்வைப்பற்றி நாம் தமிழர் கட்சியினர் கூறும்போது இந்த ஒரு நாள் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் அன்னை தமிழ் காக்க அயராது உழைப்போம் என்று உறுதி எடுத்திருப்பதாக கூறுகிறார்கள். நாங்கள் மட்டுமல்ல தமிழராக பிறந்த ஒவ்வொருவரும் தமிழைக் காக்க முன்வர வேண்டும் என்று கூறுகிறார்கள்.