மாநாடு 26 September 2022
இன்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மின்வாரிய ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்கங்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அதன்படி தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திலும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஏன் இந்த காத்திருப்பு போராட்டம் என்ற நமது கேள்விக்கு மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது:
எல்லாருக்கும் பணி செய்யும் நேரம் காலவரையறை இருக்கும், ஆனால் நாங்கள் அலுவலகத்தில் வந்து கையெழுத்து காலையில் போடுவது மட்டும்தான் சரியான நேரத்திற்கு போட முடியும் ,ஆனால் வீட்டிற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு எல்லாம் செல்ல முடியாது, ஏனெனில் அப்போது வேறு பணிகள் இருந்தாலும் அதையும் செய்து முடித்துவிட்டு அதன் பிறகு தான் வீட்டிற்கு செல்வோம் ,மழையாக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும் ,புயலாக இருந்தாலும், எந்நேரமும் மக்களுக்காக அரும்பாடு பட்டு பணிகளை செய்து வருகிறோம்
இப்படி இருக்கையில் எப்படி எங்களது மின்வாரியம் நட்டத்தில் இயங்கும். அரசியல்வாதிகளின் நிர்வாக சீர்கேட்டால் எங்களது உழைப்பு வீணாக போகிறது, எங்களிடமே அதாவது எங்கள் மின்வாரியத்திற்கு சொந்தமான பல உற்பத்தி நிலையங்கள் இருக்கிறது, அவற்றை செயல்படுத்தினாலே போதும் மின்வாரியம் லாபத்தில் இயங்கும், உண்மை நிலை இப்படி இருக்க இவர்கள் தனியாரிடம் மின்சாரத்தை விலைக்கு வாங்கி, அதனை விநியோகத்து வருவதால் ஏகப்பட்ட நட்டம் அரசுக்கு ஏற்படுகிறது .
இதனை சரி செய்யாமல் ஊழியர்களின் வயிற்றில் அடிக்கப் பார்க்கிறது ஆளும் திமுக அரசு. கடந்த 2003 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் மின் தேவைக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சாரத்தை உற்பத்தி செய்தது, அதன் காரணமாக லாபத்தில் இயங்கியது. தமிழ்நாடு மின்சார வாரியம் மீண்டும் அதே போல மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தை தொடங்க வேண்டும். அதை விடுத்து உழைக்கும் ஊழியர்களின் உரிமைகளில் அரசு கை வைத்தால் அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும். மின்சார வாரியத்தில் வேலைகள் அதிகம் இருக்கிறது ஆனால் ஊழியர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள், ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும்.
மேலும் பிபி 2 என்கிற திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் தமிழக அரசு ஏனெனில் தொழிலாளர்கள் கடந்த 65 ஆண்டுகளாக பெற்று வந்த உரிமைகளை உடைக்கும் சரத்துக்கள் இந்த பிபி 2 என்கிற திட்டத்தில் இருக்கிறது என்றார்கள்.
வேறு சிலர் பேசும்போது வாக்கு அரசியலை பிறகு வைத்துக் கொள்ளலாம், நமது வாரிசுகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாகி இருக்கும் கேடான இந்தத் திட்டத்தை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் அதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஒற்றுமையோடு, இன்னமும் உறுதியாக களத்திற்கு வர வேண்டும், அரசுகளின் இந்தத் திட்டம் மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க திட்டமிட்டுள்ளதாக என்ன தோன்றுகிறது. மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஓரளவாவது அரசு ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொண்டதன் விளைவு கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் இன்று முதல்வர் ஆவதற்கு நாங்கள் எல்லாம் ஒன்றுபட்டு வாக்களித்தோம்,ஆனால் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து நடந்து கொள்வதை பார்த்தால் இவரோடு திமுக முடிந்து விடுமோ இவரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்களின் ஆதரவு வேண்டாமோ என்கின்ற எண்ணம் தான் தோன்றுகிறது.
நமது சங்கங்களையும் சிலர் அரசுக்கு ஆதரவாக இருந்து கொண்டு நமது சங்கத்தின் ஒற்றுமையை குலைத்து ,பிரித்தாலும், சூழ்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள் ,அதில் சங்கத் தலைவர் மணிமாறன் குறிப்பிடத்தக்கவர் .சங்கத் தலைவர்களாக இருப்பவர்கள், சங்கத்தின் ஊழியர்களுக்காக உழைக்க வேண்டும், அரசுக்கு கைக்கூலியாக இருப்பதை தவிர்க்க வேண்டும். இந்த போராட்டம் ஒரு அடையாள போராட்டம் மட்டுமே அரசின் போக்கு இந்த போராட்டத்தின் மூலம் மாறவில்லை என்றால் அனைத்து சங்கங்களும் ஒன்று சேர்ந்து பேசி அடுத்த கட்டமாக மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம், எப்படியாவது எங்கள் உரிமையை மீட்போம் என்று பேசினார்கள்.
இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு
சுந்தர்ராஜ் பொறியாளர் சங்க மாநில துணை தலைவர் தலைமை தாங்கினார்,
இப் போராட்டத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு ஊழியர்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள்:
ராஜாராமன் மாநில செயலாளர் சிஐடியூ,
பொன்.தங்கவேலு மின்சார தொழிலாளர் சம்மேளனம்,
ராகவன் ஐக்கிய சங்கம்,
மகாலிங்கம் பொறியாளர் கழகம்,
ஸ்டாலின் அம்பேத்கர் சங்கம்,
பஞ்சு ராஜேந்திரன், முருகேசன் அண்ணா தொழிற்சங்கம்
ஜெயமணிராஜ்,சுகுமார் ஜனதா சங்கம்,
ராஜன் ஓய்வு பெற்றோர் சங்கம்,
து.கோவிந்தராஜூ மாவட்ட தலைவர் சிஐடியூ,
பழனிநாதன் ஏஇஎஸ்யூ,
ராஜா எம்ப்ளாயீஸ் பெடரேஷன்
வீடியோ லிங்க் இதோ: https://youtu.be/XYX0HPNjyw0