மாநாடு 27 மே 2023
இன்று காலை 11 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் 75 அடி உயரம் உள்ள கொடி கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியை ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து ஒரத்தநாடு அருகே கண்ணுகுடி நால் ரோட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருந்த கொடி கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில்
அமைந்துள்ள ஆம்பலாபட்டில் ஊர் மக்கள் புடை சூழ இங்கும் நாம் தமிழர் கட்சியின் கொடியை ஏற்றிவிட்டு அங்கிருந்து 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணி வகுக்க பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயத்தில் புலிக்கொடியை ஏற்றினார் அதனை ஒட்டி இன்று மாலை கரம்பயம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள திடலில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது இதில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் எழுச்சி உரையாற்ற இருப்பதால் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள கட்சியின் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறார் என்றனர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.
மேலும் கரம்பயத்தில் மாலை நடைபெற்ற கூட்டத்தையும் கட்சியில் 2000 பேர் இணைந்தது உட்பட பல தகவல்களையும் அறிய அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு புலனாய்வு மாத இதழை படியுங்கள் தமிழ்நாடு முழுவதும் கடைகளில் கிடைக்கிறது.