மாநாடு 5 July 2022
யாரும் எதிர்பார்க்காமல் எதிர்பாராமல் நடந்து விடுவது விபத்து,
நேற்று தஞ்சாவூரில் முக்கிய பகுதியான ஜெபமாலைபுரம் பகுதியில் குப்பை கிடங்கில் தீ பற்றி அருகில் இருந்த வீடுகளில் தீ பரவி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் ஏறக்குறைய 9 வீடுகள் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்து விட்டது என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
இந்த குப்பை கிடங்கு அடிக்கடி தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் அதிலிருந்து வரும் புகை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், தெற்கு வீதி ,வடக்கு வீதி, பெரிய கோயில், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தோராயமாக மூன்று கிலோ மீட்டர் அளவுக்கு அதன் தாக்கம் இருக்கும்,
இந்த கிடங்கைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகள் இருக்கின்றன. குப்பை கிடங்கில் இருந்து எப்போதுமே துர்நாற்றம் வீசுவது வழக்கம். இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இங்கு உள்ள மக்களுக்கு அதிகம் இருக்கிறது.
அடிக்கடி தீப்பிடித்து வரும் புகையை சுவாசிப்பதால் சுவாசக் கோளாறுகளும் அங்கு வாழும் மக்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது ,இதை அனைத்தையும் எடுத்துக்காட்டி இங்கு உள்ள குப்பைக் கிடங்கை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், இந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்களும், போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், நடத்தி இருக்கிறார்கள்.
இதை யாரும் காதில் வாங்கி கவனம் எடுத்து மாற்றாததின் விளைவு,நேற்று நடந்த தீ விபத்தில் ஜெபமாலைபுரத்தில் வாழ்ந்த மக்கள் தங்களது வாழ்விடங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்தது மட்டுமல்லாமல் ,ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆரோக்கியசாமி என்பவர் தீ விபத்தில் சிக்கி படுக்காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்
இன்று பரிதாபமாக தனது இன்னுயிரை விட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்கள் கதறி அழுவது கல் மனது உடையோரையும் கலங்க வைக்கிறது.
கவர்மெண்ட்டையும், கவர்மெண்ட் அதிகாரிகளையும் கரைய வைக்குமா இவர்களின் கண்ணீர்.
வீடியோ லிங்க் இதோ:https://youtu.be/EyZLhK8eNmM