மாநாடு 15 July 2022
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்ற சிறப்பு தேர்வில் நான்கு சாதிகளில் எந்த சாதி தாழ்ந்த சாதி என்ற சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் சுதந்திர போராட்ட இயக்கங்கள் 1880, 1947 வரை என்கிற தலைப்பில் சேலம் பெரியார் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு முதுகலை வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்ற சிறப்பு தேர்வில் மஹர், நாடார், ஈழவர், அரிஜன் ஆகிய சாதி பிரிவுகளை குறிப்பிட்டு இவற்றுள் தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி
என்கிற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
சாதிய ஒழிப்புக்காக போராடியதாக போற்றப்படும் பெரியார் பெயரில் இயங்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்பு தேர்வில் எந்த சாதி தாழ்ந்த சாதி என்கிற கேள்வியை மாணவர்களிடத்தில் பரிட்சையின் வாயிலாக கேட்டிருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை கடுமையாக தெரிவித்து வருகிறார்கள்,
சாதிய பிரிவினையை ஊக்குவிக்கும் நோக்கில் பரீட்சை வினாத்தாளில் பெரியார் பல்கலைக்கழகத்தில் கேட்கப்பட்டிருக்கும் இந்த கேள்வி பெரியார் பல்கலைக்கழகத்தின் வேறு செயல்பாடுகளையும் கேள்விக்குறியாகி இருக்கிறது.