மாநாடு 16 July 2022
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கொரோனா அதிகமாக பிரபலங்களை தொற்றி வருகிறது அதன்படி ஏற்கனவே கனிமொழி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், உள்ளிட்டவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த சில நாட்களாக சளி பிரச்சனை இருந்துவந்ததாக கூறப்படுகிறது. எனினும் அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த நிலையில் பாஜகவின் தமிழ்நாட்டின் தலைவர் அண்ணாமலை ஓபிஎஸ் நலம் பெற வேண்டும் வாழ்த்தியிருந்தார், அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் முழுமையாக நலம் பெற விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் லிங்க:https://twitter.com/mkstalin/status/1548224615972868098?t=7hw5TVWmjdrKk5G7jcD8SQ&s=19