மாநாடு 26 September 2022
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பஞ்சநதி கோட்டை, மேல உள்ளூர் கிராமத்தை இணைக்கும் வடிவாய்க்கால் பாலத்தை துண்டித்து விட்டு கடந்த 1 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக அருகிலேயே தற்காலிகமாக பாதை பொதுமக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டது அந்தப் பாதையிலேயே பள்ளி ,கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் பயணித்து வந்தார்கள் என்று கூறப்படுகிறது .
இந்நிலையில் இன்னமும் வடிவாய்க்கால் பாலம் கட்டி முடிக்கும் பணி முழுமை அடையாத காரணத்தால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்கின்ற மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஏனெனில் அருகிலேயே அமைத்துக் கொடுத்த தற்காலிக நடைபாதையும் மழையில் மூழ்கி விட்டதால் பொதுமக்கள் மிகவும் அல்லல் படுகின்றனர்.
இன்னும் ஓர் இரு நாட்களில் மழைக்காலம் தொடங்க இருப்பதால் விரைந்து உடனடியாக இந்த பாலம் கட்டும் பணியை முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்தப் பகுதியில் நடை பாதை சரிவர இல்லாததால் நீரில் மாணவ, மாணவிகள் நடந்து செல்கின்றனர். இதனால் மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே பொறுப்புணர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இந்த மக்களின் கோரிக்கையை ஏற்று தீர்த்து வைக்க வேண்டும்.
செய்தி: சதிஷ்