மாநாடு 6 June 2022
நாமக்கல் மாவட்டம் உடையார்பாளையம் அரசு பள்ளியில் படித்த 15 வயது உடைய சிறுமியை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கொல்லிமலையை சேர்ந்த மேஸ்திரி வேலை பார்க்கும் கந்தசாமி என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது,
இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக சிறுமி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டதாகவும் இவரை பலமுறையும் வீட்டிற்கு வந்து கணவர் கந்தசாமி தன்னோடு சேர்ந்து வாழ அழைத்ததாகவும் வர மறுத்து தாய் வீட்டிலேயே சிறுமி இருந்ததாகவும் கூறப்படுகிறது, இதனையடுத்து
கந்தசாமி தனது நண்பர்கள் 6 பேருடன் கூட்டுச்சேர்ந்து பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை காரில் கடத்திச் சென்று விட்டார்கள் என்று சிறுமியின் பெற்றோர்கள் ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இதனையடுத்து கணவர் கந்தசாமி மீது காவலர்கள் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்து இருக்கிறார்கள், மற்ற ஏழு பேரின் மீது சிறுமியை கடத்தியது, சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க உதவியாக இருந்தது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிந்து இருக்கிறார்கள்.
மேலும் கடந்த 6 மாதமாக குழந்தை திருமணத்தை மறைத்ததன் காரணமாக இரு வீட்டின் பெற்றோர்களிடமும் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தை திருமணத்தை மறைத்த காரணமாக அவர்களையும் காவலர்கள் கைது செய்வார்கள் என்று தெரிய வருகிறது.