மாநாடு 2 August 2022
பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது ,அதில் டீசல், பெட்ரோல் ,எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதை பற்றி பேசுவதற்காக அனுமதி அளிக்கும்படி தொடர்ந்து எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
அதன் காரணமாக நேற்று விலைவாசி உயர்வு பற்றி விவாதிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது, அப்போது பேசிய திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி விலை உயர்வு காரணமாக சாமானியர்கள் வாழ்க்கையே போராட்டமாக மாறி இருக்கிறது டீசல் பெட்ரோல் எரிவாயு போன்றவற்றிற்கு மட்டும் ஏறக்குறைய 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கிறது, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்து உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியமும் நிறுத்தப்பட்டுள்ளது, சமையல் எண்ணெயும் கிடுகிடுவென விலை உயர்ந்து உள்ளது. விலைவாசி உயர்வை பற்றி ஒரு சிறுமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் தனக்கு எழுத வாங்க வேண்டிய பென்சிலின் விலை கூட உயர்ந்துள்ளதாக அக்கடிதத்தில் எழுதியுள்ளார், மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி வரிப்பணத்தை கொடுத்தால் கூட போதும் நாங்கள் யாரிடமும் கடன் வாங்க வேண்டிய நிலை இருக்காது என்றார் மேலும் மத்திய அமைச்சர் பேசும்போது தக்காளி, வெங்காயத்தின் விலை குறைந்திருப்பதாக குறிப்பிட்டார். அதற்காக நாங்கள் தினமும் தக்காளியையும், வெங்காயத்தையும் வைத்து சட்டினியை செய்து மூன்று வேலையும் சாப்பிட முடியுமா என்று காட்டமாக பேசினார்.
திமுக = பாஜக
தமிழகம் தற்போது இருக்கும் நிலையை அப்படியே பாராளுமன்றத்தில் தமிழக மக்களின் குரலாக திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியிருக்கிறார் அதே சமயம் இவ்வளவு விலை உயர்வு இருக்கின்ற தற்காலத்தில் தான் சொத்து வரிகள் உயர்வு ,ஆவின் தயிர் நெய் வெண்ணெய் காண விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என அடுத்தடுத்த விலை உயர்வை தனது பங்குக்கு தமிழகத்தை ஆளும் திமுக அரசும் மக்கள் மீது பாரத்தை ஏற்றி வருவதையும் நிறுத்த வேண்டும், தமிழ்நாட்டில் அந்த சிறுமி கடிதத்தில் பிரதமருக்கு கூறியதைப் போல எழுதி படிப்பதற்காக பென்சில் வாங்குவதே பெரும்பாடாக இருக்கின்ற இந்த நேரத்தில் எழுதாத பேனாவிற்காக 81 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை நிறுத்திவிட்டு நல்லதொரு ஆட்சியை திமுக நடத்த வேண்டும் தற்போது திமுக அரசின் ஆட்சி பாஜக அரசின் ஆட்சிக்கு சற்றும் சளைத்தது அல்ல என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.