மாநாடு 18 August 2022
தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பெண் பயணிகளிடம் ஆண்கள் தரக்குறைவாகவோ, தவறாகவோ நடந்து கொள்ளக் கூடாது சத்தம் எழுப்புதல், கண் அடித்தல், சைகை காட்டுதல், விசில் அடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் மீறினால் தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
பெண் பயணிகளிடம் அத்துமீறும் ஆண் பயணிகளை நடத்துனர்களே எச்சரித்து பேருந்தில் இருந்து இறக்கிவிடலாம், மேலும் அதற்கு கட்டுப்படாத ஆண்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்று திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தெரிவிக்கிறது.
476920cookie-checkதண்டிக்கப்படுவீர்கள் தமிழக அரசு எச்சரிக்கை